கேப்டன் விஜயகாந்த் பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் – ரஜினிகாந்த்

என் அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் ட்வீட்.

என் அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் ட்வீட்.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டது என அக்கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிக்கையில், நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்சனையால் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டது.

இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘என் அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

unknown node
கேப்டன் விஜயகாந்த் பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் – ரஜினிகாந்த்