காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வருக்கு கேப்டன் விஜயகாந்த் பாராட்டு.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மதுரை ஆதிமூலம் பிள்ளை தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதல்வர், அதன் பின் மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டு, மாணவர்களுக்கும் ஊட்டி விட்டார்.
முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வருக்கு, கேப்டன் விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில்,அரசுப்பள்ளி மாணவர்களுக்கான காலைஉணவு திட்டத்தை முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மதிய உணவு திட்டத்துடன் சேர்த்து காலை உணவு திட்டத்தை அமல்படுத்தி இருக்கும் தமிழக அரசுக்கும்,முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின்அவர்களுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
unknown node