அண்ணன் கமலஹாசன் அவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் – சீமான்

அண்ணன் கமலஹாசன் அவர்கள் விரைந்து முழு உடல்நலம் பெற்றுத் திரும்ப வேண்டுமென விழைகிறேன் என சீமான் ட்வீட்.

அண்ணன் கமலஹாசன் அவர்கள் விரைந்து முழு உடல்நலம் பெற்றுத் திரும்ப வேண்டுமென விழைகிறேன் என சீமான் ட்வீட்.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து, கமல்ஹாசன் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக இராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அறிக்கை வெளியிடபட்டது.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைஒப்பளர் சீமான் அவர்கள், ‘என் அன்பிற்கினிய அண்ணன் கமலஹாசன் அவர்கள், அமெரிக்கப் பயணத்தை முடித்து நாடு திரும்பும்போது மருத்துவப் பரிசோதனையில் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அண்ணன் கமலஹாசன்அவர்கள் விரைந்து முழு உடல்நலம் பெற்றுத் திரும்ப வேண்டுமென விழைகிறேன்!’ என ட்வீட் செய்துள்ளார்.

unknown node