#Breaking:சற்று முன்...அவசரநிலை பிரகடனம் அமல் – பிரதமர் உத்தரவு!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில்,கொழும்புவில் உள்ள இலங்கை ஜனாதிபதி மாளிகையை இரு தினங்களுக்கு முன்னர் முற்றுகையிட்டு

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில்,கொழும்புவில் உள்ள இலங்கை ஜனாதிபதி மாளிகையை இரு தினங்களுக்கு முன்னர் முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் அதனைக் கைப்பற்றினர்.

இதனிடையே,அரசு மாளிகையில் இருந்து தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதாக  இலங்கை பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.இதனையடுத்து,கோத்தபய ராஜபக்சே,பதவி விலகல் கடிதத்தில் நேற்று கையெழுத்திட்டார் என்று கூறப்பட்டது.

ஆனால்,இன்று அவர் பாராளுமன்றத்தில் பதவி விலகல் கடிதத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு தலைநகர் மாலே பகுதியை இன்று அதிகாலை 3 மணியளவில் சென்றடைந்துள்ளார் என சர்வதேச நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதனிடையே,பிரதமர் தற்காலிகமாக அதிபர் பதவியை ஏற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது.

இலங்கையில்,அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால்,அவசரநிலைபிரகடனம்அமல்படுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.குறிப்பாக, இலங்கையில்,பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டு,ரணில் விக்கிரமசிங்கேவும் உடனே பதவி விலக்கக் கோரி மக்கள் போராட்டம் நடைபெறும் நிலையில்,அவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்த பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே ஏப்ரல் 1 ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட நிலையில்,கடந்த நான்கு மாதங்களில் இரண்டாவது முறையாக தற்போது இலங்கையில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

#Breaking:சற்று முன்...அவசரநிலை பிரகடனம் அமல் – பிரதமர் உத்தரவு!