#Breaking:இனி நெல் கொள்முதல் நிலையங்களிலே இணைய வழி பதிவு – நுகர்பொருள் வாணிபக் கழகம் திடீர் அறிவிப்பு

#Breaking:Online registration at Paddy Procurement Centers - Consumer Goods Corporation Announcement!

விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய நெல் கொள்முதல் நிலையங்களிலே இணைய வழி பதிவு செய்யப்படும் என்று நுகர்பொருள் வாணிபக் கழகம் அறிவிப்பு.

தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய நெல் கொள்முதல் நிலையங்களிலே இணைய வழி பதிவு செய்யப்படும் என்று தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம் அறிவித்துள்ளது.

அதன்படி,விஏஓ வழங்கும் அடங்கல் ஆவணம்,ஆதார் நகல் உள்ளிட்ட ஆவணங்களை விவசாயிகள் சமர்பித்தால் இணைய வழியில் பதிவேற்றம் செய்து டோக்கன் வழங்கப்படும் எனவும் நுகர்பொருள் வாணிபக் கழகம் தெரிவித்துள்ளது.

இணைய வழியில் நெல் கொள்முதல் செய்வதில் சிக்கல்கள் இருப்பது குறித்து வெளியான குற்றச்சாட்டுகளை அடுத்து,விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய கொள்முதல் நிலையங்களிலே இணைய வழி பதிவு செய்யப்படும் என்ற நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் இத்தகைய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும்,இது தொடர்பாக பட்டியல் எழுத்தர்கள்,கொள்முதல் அலுவலர்கள் ஆகியோருக்கு அறிவுறுத்துமாறு மண்டல மேலாளர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

#Breaking:இனி நெல் கொள்முதல் நிலையங்களிலே இணைய வழி பதிவு – நுகர்பொருள் வாணிபக் கழகம் திடீர் அறிவிப்பு