#BREAKING : மேலும் இரண்டு மத்திய அமைச்சர்கள் ராஜினாமா...!

இன்று மாலை 6 மணிக்கு மத்திய அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் நிலையில், மத்திய அமைச்சர்கள் 6 பேர் ராஜினாமா.

இன்று மாலை 6 மணிக்கு மத்திய அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் நிலையில், மத்திய அமைச்சர்கள் 6 பேர் ராஜினாமா.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இரண்டாவது முறையாக பதவியேற்றதற்கு பிறகு முதல் முறையாக இன்று அமைச்சரவை விரிவாக்கத்துடன் மாற்றம் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், 43 புதிய மத்திய அமைச்சர்களின் பதவியேற்பு விழாவானது இன்று மாலை 6 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் பதவி பிரமாணத்தை செய்து வைக்க உள்ளார்.

இதனையடுத்து, மத்திய அமைச்சர்கள் ரமேஷ் பொக்ரியால், சந்தோஷ் கங்வார், தாவர்சந்த் கெலாட், தபஸ்ரீ சவுத்ரி ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா  செய்துள்ள நிலையில், தற்போது மத்திய அமைச்சர்களான சதானந்தா கவுடா மற்றும் ஹர்ஷவர்தன் ஆகியோரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.