பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட சொந்த காரணங்களுக்காக தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். அதன்படி, தனது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுக்கு அனுப்பினார். அதுமட்டுமில்லாமல், பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் தலைநகரான சண்டிகரின் யூனியன் பிரதேசத்தின் (UT) நிர்வாகி பதவியிலிருந்தும் விலகுவதாகவும் அறிவித்தார். இந்த எதிர்பாராத அறிவிப்பு இப்பகுதியின் எதிர்கால தலைமை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. முன்பு தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த […]
இத்தாலியில் அரசாங்க நெருக்கடிக்கு மத்தியில் பிரதமர் மரியோ ட்ராகி வியாழன் அன்று ராஜினாமா செய்வதாக தெரிவித்தார். முன்னதாக செனட்டில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் டிராகி வெற்றி பெற்றார்.பிப்ரவரி 2021 இல் ஜனாதிபதி செர்ஜியோ மட்டரெல்லாவால் டிராகி பிரதமராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. “இன்றிரவு குடியரசுத் தலைவரிடம் எனது ராஜினாமாவை சமர்ப்பிப்பேன் என்பதை நான் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்,” என்று டிராகி கவுன்சில் கூட்டத்தில் கூறினார்.
இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்யாவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக புகாருக்குள்ளான கிறிஸ் பின்ச்சர் என்பவருக்கு துணை கொறடா பதவியை பிரதமர் போரீஸ் ஜான்சன் அளித்துள்ளார் என்பதைக் காரணம் காட்டி,உட்கட்சி பூசல் ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து,நான்கு அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.கூடுதலாக மேலும் ஒரு அமைச்சரும் தனது ராஜினாமா செய்தார். இந்நிலையில்,இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் ராஜினாமா செய்யாவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இங்கிலாந்தில் 48 மணி நேரத்தில் இதுவரை அமைச்சர்கள்,உயரதிகாரிகள் உட்பட 54 பேர் […]
ஒப்பந்தக்காரர் சந்தோஷ் பாட்டில் என்பவரை தற்கொலைக்கு தூண்டியதாக கர்நாடக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்ப மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஈஸ்வரப்பா இன்று மாலை கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுக்கவுள்ளார். அதற்கு முன்னதாக தொண்டர்களை சந்தித்து பேசிய அவர், என் மீதான வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கையில் நான் அமைச்சராக தொடர்ந்தால் அது என்னை பாதிக்கும் என்பதால் தான் ராஜினாமா செய்கிறேன். நான் நிரபராதி என்பதை நிரூபித்து, மீண்டும் அமைச்சராகுவேன் […]
ஆஸ்கர் விழாவில் பங்கேற்க பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த வாரம் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவின் போது பிரபல நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக் மேடையில் பேசிக் கொண்டிருந்த போது வில் ஸ்மித் அவர்களின் மனைவியாகிய ஜடா ஸ்மித்தின் தலைமுடி குறித்து நக்கலடித்துள்ளார். அதிர்ச்சி – மன்னிப்பு: இதனால் கோபமடைந்த வில் ஸ்மித்,மேடையில் ஏறி சென்று கிறிஸ் ராக் கன்னத்தில் அறைந்தார்.இந்த நிகழ்வு ஆஸ்கர் விருது […]
ஆஸ்கர் அகாடமி உறுப்பினர் பதவியை நடிகர் வில் ஸ்மித் ராஜினாமா செய்துள்ளார். அமெரிக்காவில் கடந்த திங்கள் கிழமை நடைபெற்ற ஆஸ்கார் விருது வழங்கும் விழாவின் போது பிரபல நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக் அவர்கள் மேடையில் பேசிக் கொண்டிருந்த போது வில் ஸ்மித் அவர்களின் மனைவியாகிய ஜடா ஸ்மித்தை நக்கலடித்துள்ளார். சக நடிகர் கன்னத்தில் அறைந்த வில் ஸ்மித்: இதனால் கோபமடைந்த வில் ஸ்மித், மேடையில் ஏறி சென்று கிறிஸ் ராக் கன்னத்தில் அறைந்தார். இந்த நிகழ்வு […]
நர்கட்டியா தொகுதி பாஜக எம்எல்ஏ ரஷ்மி வர்மா தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பீகாரில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது. பாஜக எம்.எல்.ஏ ஒருவர் கட்சியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. பீகார் மாநிலத்தின் நர்கதியாகஞ்ச் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏவான ரஷ்மி வர்மா இன்று தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். தனது பதவி விலகலுக்கு தனிப்பட்ட காரணங்களை அவர் குறிப்பிட்டுள்ளார். எம்.எல்.ஏ ரஷ்மி வர்மா கையில் உள்ள கடிதம் 2022 ஜனவரி 9 ஆம் தேதி எம்எல்ஏவின் லெட்டர் […]
காபூல் பல்கலைக்கழக துணைவேந்தர் மாற்றப்பட்டதையடுத்து 70 ஆசிரியர்கள் ராஜினாமா செய்துள்ளனர். காபூல் பல்கலைக்கழகத்தின் பிஎச்டி படித்த துணைவேந்தர் முஹம்மது ஒஸ்மான் பாபுரியை தலிபான்கள் பதவி நீக்கம் செய்து அவருக்குப் பதிலாக பிஏ பட்டம் பெற்ற முஹம்மது அஷ்ரப் கெய்ரத்தை நியமித்தனர். இதனையடுத்து,காபூலை தளமாகக் கொண்ட மிகப்பெரிய பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக அஷ்ரஃப் கயரத் நியமிக்கப்பட்டிருப்பது சமூக ஊடகங்களில் எதிர்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.ஏனெனில்,கடந்த ஆண்டு அஷ்ரப் கெய்ரத்தின் ஒரு ட்வீட்டை விமர்சகர்கள் முன்னிலைப்படுத்தினர்,அதில் அவர் ஒரு பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தினார். இதற்கு […]
குஜராத் சட்டசபை சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாஜகவை சேர்ந்த விஜய் ரூபானி கடந்த 2016-ம் ஆண்டு முதல் முதல்வராக இருந்து வந்த நிலையில்,கடந்த 5 நாட்களுக்கு முன்னர் திடீரென ஆளுநரை சந்தித்து அவர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதைத்தொடர்ந்து, குஜராத்தில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குஜராத்தின் 17-வது முதல்வராக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டார்.அதன்பின்னர்,கடந்த 13 ஆம் தேதியன்று குஜராத் மாநிலத்தின் 17-வது முதலமைச்சராக பூபேந்திர […]
மலேசிய பிரதமர் முகைதின் யாசின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல். கடந்த ஆண்டு பிரதமராக இருந்த மகாதீர் பதவி விலக்கியதையடுத்து, முகைதீன் யாசின் பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில், பிரதமர் முகைதின் யாசின் தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் வகித்து வந்த ஐக்கிய மலேசிய தேசிய அமைப்பு கூட்டணியிலிருந்து விலகியது. இதனால் பிரதமர் முகைதின் யாசின் அரசு பெரும்பான்மை பலத்தை இழந்தது. மலேசிய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளும் அரசு பெரும்பான்மை இழந்தால் பிரதமர் உடனடியாக பதவி விலக […]
அகில இந்திய மகிளா காங்கிரஸின் தலைவர் சுஷ்மிதா தேவ் கட்சியில் இருந்து விலகல். அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். முன்னாள் மக்களவை எம்.பியான சுஷ்மிதா அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இவர், விலகல் கடிதத்தை கட்சித்தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி உள்ளார். கட்சியில் இருந்து இவர் விலக்குவதற்கான காரணங்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் ஆலோசகர் பதவியை தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் ராஜினாமா செய்துள்ளார். அடுத்த ஆண்டு பஞ்சாபில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பஞ்சாப் முதல்வரின் ஆலோசகர் பதவியை பிரஷாந்த் கிஷோர் ராஜினாமா செய்துள்ளார். பிரசாந்த் கிஷோர் முதல்வர் அமரிந்தர் சிங்குக்கு எழுதிய கடிதத்தில், பொது வாழ்கையிலிருந்து சற்று ஓய்வு எடுத்துக்கொள்வதாகவும், உங்கள் முதன்மை ஆலோசகராக என்னால் பொறுப்புகளை ஏற்க முடியவில்லை. இந்த பொறுப்பிலிருந்து என்னை தயவுசெய்து விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அடுத்தகட்டம் குறித்து […]
எடியூரப்பா அவர்கள், கர்நாடகா முதல்வராக பதவியேற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இன்று அவர் பதவி விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு, ஜூலை 26-ம் தேதி, எடியூரப்பா அவர்கள் கர்நாடகா முதல்வராக பொறுப்பேற்றார். இந்நிலையில், கர்நாடகா முதல்வராக உள்ள எடியூரப்பா அவர்கள், பதவி விலக உள்ளதாக சமீப நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இதுகுறித்து பதிலளித்த அவர், கட்சி மேலிடம் கூறினால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார். வரும் […]
கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா குறித்து தகவல் பரவி வருகிறது. இதனால் தொண்டர்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று எடியூரப்பா ட்வீட் செய்துள்ளார். கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு 75 வயது ஆகிறது. அதனால் பாஜகவின் மேலிடத்திலிருந்து முதல்வர் பதவியிலிருந்து விலகிக்கொள்ள கூறியதாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா அரசு பதவியேற்று ஜூலை 26 ஆம் தேதியுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. தற்போது இவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, பாஜகவின் உண்மையாக தொண்டனாக […]
இன்று மாலை 6 மணிக்கு மத்திய அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் நிலையில், மத்திய அமைச்சர்கள் 6 பேர் ராஜினாமா. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இரண்டாவது முறையாக பதவியேற்றதற்கு பிறகு முதல் முறையாக இன்று அமைச்சரவை விரிவாக்கத்துடன் மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், 43 புதிய மத்திய அமைச்சர்களின் பதவியேற்பு விழாவானது இன்று மாலை 6 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் பதவி […]
இன்று மாலை 6 மணிக்கு ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் நிலையில், மத்திய அமைச்சர்கள் 4 பேர் ராஜினாமா. இன்று மாலை 6 மணிக்கு ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒன்றிய அமைச்சர்களாக புதிய அமைச்சர்கள் இன்று பதவி ஏற்க உள்ளனர். இந்நிலையில், ஒன்றிய அமைச்சர்கள் ரமேஷ் பொக்ரியால், சந்தோஷ் கங்வார், தாவர்சந்த் கெலாட், தபஸ்ரீ சவுத்ரி ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும், தங்களது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளதாகவும் […]
மத்திய அரசின் கொரோனா தடுப்பு ஆய்வு குழுவின் தலைவர் ஷாகித் ஜமால் திடீர் விலகல். கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸின் மரபணு கூட்டமைப்பின் ஆய்வு மற்றும் ஆலோசனை குழு, நாட்டில் உள்ள 10 முக்கியமான அரசின் ஆய்வகங்களை ஒன்றிணைத்து, கொரோனா தடுப்பு ஆய்வகத்தை உருவாக்கி உள்ளனர். இதற்கு தலைவராக மூத்தவராக ஷாகித் ஜமால் அவர்கள் நியமிக்கப்பட்டார். இவர் அசோகா பல்கலை கழகத்தின் திரிவேதி உயிர் அறிவியல் துறையில் தலைவராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், இந்த குழுவில் […]
டி.எம் & சி.எம்.ஓ ஆல் மனரீதியாக துன்புறுத்தப்பட்டதால் ராஜினாமா சமர்ப்பிப்பு! உத்தரபிரதேசத்தின் உன்னாவோ மாவட்டத்தில் சி.எச்.சி மற்றும் பி.எச்.சி-களின் பொறுப்பாளர்களாக பணிபுரியும் பதினான்கு மருத்துவர்கள் நிர்வாக அதிகாரிகளால் மனரீதியான துன்புறுத்தல் குற்றச்சாட்டில் தங்கள் ராஜினாமாவை சமர்ப்பித்துள்ளனர். ஏனெனில் அவர்கள் அதிகாரிகளால் தண்டனை உத்தரவுகள், அநாகரீகமான நடத்தை மற்றும் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளின் ஒத்துழையாமைக்கு உட்படுத்தப்பட்டனர் இதன்காரணத்தினால் சமுதாய சுகாதார மையங்களின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட 11 மருத்துவர்களும், மாவட்டம் முழுவதும் பல ஆரம்ப சுகாதார மையங்களுக்கு தலைமை தாங்கும் […]
அசாம் மாநிலத்தின் தற்போதைய முதல்வர் சர்பானந்தா சோனோவால் தனது ராஜினாமா கடிதத்தை அசாம் ஆளுநர் ஜெகதீஷ் முகியிடம் கொடுத்துள்ளார் சமீபத்தில் தமிழ்நாடு, அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில், 126 தொகுதிகளை உள்ளடக்கிய அசாம் மாநிலத்தில் தேர்தலில் 75 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. இதில், 60 தொகுதிகளில் தனித்து வெற்றி பெற்ற பாஜக முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலே தேர்தலை எதிர்கொண்டது. இதனால், முதல்வர் யார் என்பது […]
மேற்கு வங்கத்தின் முன்னாள் அமைச்சரும், சிபிஐ முன்னாள் இயக்குநருமான உபேன் பிஸ்வாஸ் நேற்று திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகினார். அவர் “தனிப்பட்ட காரணங்களுக்காக” விலகுவதாகவும், வேறு எந்த அரசியல் கட்சியுடனும் இணைய விரும்பவில்லை என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார். “எனது முடிவை கட்சியின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் தெரிவித்தேன். எட்டு கட்ட தேர்தல்களுக்கு முன்னதாக நான் விலகுகிறேன். ஏனென்றால் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர் கட்சியை விட்டு வெளியேறுவதாக யாரும் குற்றம் சாட்டுவதை நான் விரும்பவில்லை […]