#Breaking:நளினிக்கு மேலும் ஒரு மாத காலம் பரோல் நீட்டிப்பு- தமிழக அரசு உத்தரவு!

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் இருந்த நளினி அவரது தாயார் பத்மாவின் உடல் நிலையை காரணம் காட்டி 30 நாள் பரோலில் கடந்த

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் இருந்த நளினி அவரது தாயார் பத்மாவின் உடல் நிலையை காரணம் காட்டி 30 நாள் பரோலில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ம் தேதி வெளியே வந்தார்.அதன்பின்னர்,நளினிக்கு இதுவரை 3 முறை பரோல் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில்,முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு 4-வது முறையாக மேலும் ஒரு மாத காலம் பரோல் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பரோல் முடிந்து இன்று சிறைக்கு திரும்ப இருந்த நிலையில்,அவருக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே,ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி நளினி சென்னை உயர் நீதிமாமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்ய கோரும் நளினி மனுவை விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.