செந்தில் பாலாஜி ஜாமீன் மனு – அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

senthil balaji

Senthil Balaji: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ். கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதன்பின் செந்தில் பாலாஜிக்கு எதிரான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, இதற்கான நகலும் அவரிடம் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி பல்வேறு முறை செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றமும், … Read more

அமித்ஷா குறித்து சர்ச்சை பேச்சு..! நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல்காந்திக்கு ஜாமீன்

மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ராகுல்காந்தி பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு உத்தரபிரதேச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி பேசும் போது, “பா.ஜனதா கட்சி நேர்மையான மற்றும் தூய்மையான அரசியலை நம்புவதாக கூறுகிறது. ஆனால் ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் கட்சி தலைவராக இருக்கிறார்” என்று பேசினார். இது தொடர்பாக … Read more

பணிப்பெண் சித்ரவதை செய்யப்பட்ட விவகாரம்: திமுக எம்.எல்.ஏ மகன், மருமகள் ஜாமீன் மனு தள்ளுபடி

பணிப்பெண்ணை சித்ரவதை செய்து துன்புறுத்திய வழக்கில் கைதான திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சியை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன், மருமகள் மெர்லின் ஆகியோரின் இல்லத்தில் தங்கி வேலை செய்தார். இதையடுத்து பணிப்பெண்ணை இருவரும் சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தியதோடு அவரை ஊருக்கு அனுப்பாமல் கட்டாயப்படுத்தி வேலை வாங்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த … Read more

அங்கித் திவாரி ஜாமின் மனு- இன்று உத்தரவு..!

AnkitTiwari

சொத்துகுவிப்பு தொடர்பான வழக்கில் இருந்து விடுவிக்க மருத்துவர் சுரேஷ் பாவிடம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி டிசம்பர் 1 -ம் தேதி அன்று கைது செய்யப்பட்டார். மருத்துவர் சுரேஷ் பாபு மீதான வழக்கை முடித்து தருவதாக கூறி முதலில் ரூ.20 லட்சம் வாங்கிய நிலையில் மீதமுள்ள ரூ.20 லட்சத்தை வாங்கியபோது திண்டுக்கல்லில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் அங்கித் திவாரி சிக்கினார். 15 மணி நேர விசாரணைக்கு பின் திண்டுக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கித் … Read more

ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி மீண்டும் மனு தாக்கல்!

senthil balaji

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.  ஏற்கனவே ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தற்போது மீண்டும் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி சட்ட விரோத … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு.. 3-வது முறையாக தள்ளுபடி…!

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தனர். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் 2,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதற்கிடையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. அதேநேரத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் குறித்து கீழமை நீதிமன்றத்தை மீண்டும் நாடலாம் … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது வரும் 12-ம் தேதி தீர்ப்பு..!

Chennai high court - Minister Senthil Balaji

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் 2,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதற்கிடையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. அதேநேரம் செந்தில் பாலாஜி ஜாமீன் குறித்து கீழமை … Read more

செந்தில் பாலாஜி ஜாமீன்… அமலாக்கத்துறைக்கு அதிரடி உத்தரவு..!

SENTHIL BALAJI

கடந்த ஜூன் 14-ஆம் தேதி சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அதன் பிறகு அவர் பொறுப்பு வகித்து வந்த மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை ஆகிய துறைகள் மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கி கொடுக்கப்பட்டு இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கிடையில், கைது செய்யப்பட்டத்திலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி  நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.  ஏற்கனவே சென்னை முதன்மை … Read more

சந்திரபாபு நாயுடுக்கு ஜாமீன் வழங்கி ஆந்திரா ஐகோர்ட் உத்தரவு!

Chandrababu Naidu

திறன் மேம்பாட்டு பயிற்சி கழக ஊழல் வழக்கில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுக்கு ஜாமீன் வழங்கி ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான என் சந்திரபாபு நாயுடு, அவரது ஆட்சி காலத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி கழக நிதியில் சுமார் 371 கோடி ரூபாய் வரையில் ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்ற வழக்கை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 16 மாதங்கள் கழித்து சந்திரபாபு … Read more

கோவை குண்டுவெடிப்பு – குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!

SupCourt MV

கோவையில் கடந்த 1998-ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவம் தமிழகத்திலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் பல காயமடைந்தனர். இந்த நிலையில், இந்த சமபவத்தில் கைதான அல் உம்மா அமைப்பைச்சேர்ந்த பாட்ஸா மற்றும் 12 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த நிலையில், இந்த குற்றவாளிகள் 25 வருடங்களாக சிறையில்  ஜாமீன் வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான சல்மான் குர்ஷித், உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை … Read more