இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,58,089 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 385 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,73,80,253 ஆக உள்ளது.மேலும்,நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,209 ஆக உயர்வு.
கடந்த 24 மணி நேரத்தில் 2,58,089 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 13,000 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,73,80,253 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 385ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,86,451 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 1,51,740 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,52,37,461ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 16,56,341 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 1,57,20,41,825 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 39,46,348 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
ஒமைக்ரான் பாதிப்பு:
நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இதுவரை 7,743 ஆக இருந்த நிலையில்,தற்போது 8,209 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக,மகாராஷ்டிராவில் 1,738 பேருக்கும்,மேற்கு வங்கத்தில் 1,672 பேருக்கும்,ராஜஸ்தானில் 1,276 பேருக்கும்,கேரளாவில் 536 பேருக்கும்,தமிழகத்தில் 241 பேருக்கும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து இதுவரை 3,109 பேர் குணமடைந்துள்ளனர்.