#Breaking:பரபரப்பு...அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கான தேர்தலுக்கு தடையா? – உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

#Breaking: Excitement ... Ban on AIADMK election? - Case in the High Court!

சென்னை:அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி,சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் வருகின்ற டிசம்பர் 7 ஆம் தேதியன்று நடைபெறும் என்றும்,8 ஆம் தேதியன்று அதன் முடிவு அறிவிக்கப்படும் என்றும் அதிமுக தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து,அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை தொடங்கியது. ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் தேர்தல் ஆணையர்கள் பொன்னையன் மற்றும் பொள்ளாட்சி ஜெயராமன் அவர்கள் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் நடைப்பெறுகிறது.

மேலும்,இந்த வேட்புமனு தாக்கல் நாளை பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.அதன்படி,ஓபிஎஸ்,ஈபிஎஸ் நாளை தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்யவுள்ளனர்.

இந்நிலையில்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி,அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவரும்,முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

தேர்தலுக்கு 21 நாட்களுக்கு முன்னர் தேர்தல் தொடர்பான நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்ற விதியை பின்பற்றவில்லை எனவும்,பொதுச்செயலாளர் பதவியை அபகரிக்கும் முயற்சி மற்றும் ஒற்றைத் தலைமை என்ற மறைந்த முன்னாள்  முதல்வர் எம்ஜிஆரின் கருத்துக்கு எதிராக இது உள்ளது என்றும்,எனவே,ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கான தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

#Breaking:பரபரப்பு...அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கான தேர்தலுக்கு தடையா? – உயர்நீதிமன்றத்தில் வழக்கு!