பெரியார் பல்கலைகழக தேர்வில் சாதி ரீதியான கேள்வி கேட்டது குறித்து விசாரிக்க விசாரணை குழு அமைப்பு.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு பருவ தேர்வு வினாத்தாளில் சாதி குறித்து கேட்கப்பட்ட ஒரு கேள்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கண்டங்களை தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, சேலம் பெரியார் பல்கலைக்கழக வினாத்தாள் சர்ச்சை விவகாரத்தில் தவறிழைத்தோர் மீது துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் உயர்கல்வித்துறை உறுதி அளித்திருந்தது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க உயர்கல்வித் துறை இணைச் செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் தலைமையில் 3 பேர் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 1 மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவும் உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
unknown node