30 ஆயிரம் கோடி சொத்து.! சிபிஐ புகார்.! திமுகவுக்கு பதில் நோட்டீஸ் அனுப்பிய அண்ணாமலை.!

500 கோடி இழப்பீடு தரமுடியாது. திமுகவினர் மீதான குற்றசாட்டுகள் அனைத்தும் உண்மை தான் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவுக்கு பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

500 கோடி இழப்பீடு தரமுடியாது. திமுகவினர் மீதான குற்றசாட்டுகள் அனைத்தும் உண்மை தான் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவுக்கு பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளரளை சந்தித்து, திமுகவினரின் சொத்து பட்டியல் என திமுக அமைச்சர்கள், திமுக எம்பிக்கள் குறித்த DMKFiles என ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார் அண்ணாமலையின் இந்த நடவடிக்கை குறித்து  திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனத்தை தெரிவித்து, திமுகவினர் பற்றி அவதூறு ஏற்படுத்தும் விதமாக வீடியோ வெளியிட்டதாக கூறி 500 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என வக்கீல் நோட்டீஸ் அண்ணாமலைக்கு அனுப்பப்பட்டது.

திமுக சார்பில் அனுப்பப்பட்ட வக்கீல் நோட்டீஸ்க்கு பதில் அளிக்கும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் நோட்டீஸ் ஒன்றை திமுகவிற்கு அனுப்பியுள்ளார். அதில், கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி பாஜக தலைமை அலுவலகத்தில் பத்திரிக்கையாளர் மத்தியில் திமுக பற்றிஅண்ணாமலை எந்தவித அவதூறு கருத்தும் பரப்பவில்லை. உண்மையை தான் கூறினார் என்றும், இதற்காக 500 கோடி இழப்பீடு தர முடியாது என்றும் 20 பக்க பதில் நோட்டீஸ் ஒன்றை திமுகவுக்கு அண்ணாமலை அனுப்பியுள்ளார்.

அதில் , அண்ணாமலை கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மைதான் என்றும். இது, பற்றி டெல்லி சென்று சிபிஐ அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க உள்ளோம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும், திமுகவினர் குறித்து தனிப்பட்ட முறையில் தாங்கள் யாரையும் தாக்கி பேசவில்லை என்று கூறி ,  திமுகவினர் மொத்தமாக 30,000 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளனர் என தனது குற்றச்சாட்டையும் அந்த பதில் நோட்டீஸில் அண்ணாமலை தரப்பு குறிப்பிட்டுள்ளது.