அதிமுக – பாஜக கூட்டணி குறித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தான் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். – எடப்பாடி பழனிசாமி பதில்.
இன்று சேலத்தில் உள்ள அண்ணா பூங்காவில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தாய் கழகத்திற்கு அழைப்பு :
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து இபிஎஸ் பேசுகையில், தொண்டர்கள் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இங்கிருந்து பிரிந்து சென்ற அனைவரும் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் தாய் கழகத்திற்கு திரும்பி வரலாம் என தெரிவித்தார்.
தேசிய தலைமை முடிவு :
மேலும், அதிமுக – பாஜக கூட்டணி குறித்து பேசுகையில், மத்தியில் ஆளும் கட்சி பாஜக. அந்த கட்சி ஒரு தேசிய கட்சி. அந்த கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தான் எங்களுடன் பேச்சுவாரத்தை நடத்தி வருகிறார்கள். அந்த தேசிய தலைமை, மாநில நிர்வாகிகளோடு பேசி முடிவெடுப்பார்கள் என தெரிவித்தார்.
ஓபிஎஸ் பற்றிய கேள்வி :
அடுத்ததாக, ஓபிஎஸ் பற்றி பேசுகையில், நான் மற்றவர்களை பற்றி பேச முடியாது என பதில் கூற மறுத்துவிட்டார். மேலும், ஒரு கட்சியில் இருந்து இன்னோர் கட்சியில் இணைவது அவரவரது தனிப்பட்ட விருப்பம் என செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி பதில் கூறினார்.