ஆ.ராசா கைது.? திமுகவை கண்டு பாஜக பயப்படுகிறது.! முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.! 

மறைந்த திமுக தலைவர், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு திமுக தலைவரும், தமிழக

Tamilnadu CM MK Stalin

மறைந்த திமுக தலைவர், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல் என குறிப்பிட்டு அந்த கடிதத்தை குறிப்பிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில், நாடளுமன்றத்தில் திமுக உறுப்பினர்களை கண்டு பாஜக அஞ்சுகிறது. பிரதமர் மோடி தான் கலந்துகொண்ட மத்திய பிரதேச மற்றும் அந்தமான் நிகோபர் நிகழ்ச்சிகளில் திமுக மீது தேவையில்லாத விமர்சனங்களை முன் வைக்கின்றார். நாடாளுமன்றத்தில் பாஜக அரசு மீது ‘இந்தியா’ கூட்டணி கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது ஆணித்தரமான வாதங்களை காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவர் அன்புச் சகோதரர் ராகுல்காந்தி முன்வைத்து பேசினார்.

மணிப்பூரைப் பற்றி, அங்கு நடக்கும் கலவரம் பற்றி அங்கே பற்றி எரியும் வன்முறை பற்றியும் ராகுல்காந்தி பேசினார். பா.ஜ.க.வின் ஆட்சி நடைபெறும் மணிப்பூரில் பாரத மாதா என்ன நிலையில் இருக்கிறார் என்பதைக் கேள்வியாக முன்வைத்தார் ராகுல் காந்தி. இப்படியெல்லாம் பதில் சொல்ல முடியாத கேள்விகளைக் கேட்பார் என்பதால்தான் அவரது எம்.பி. பதவியைப் பறிப்பதில் பாஜக படுவேகம் காட்டியது. ஆனால், உச்சநீதிமன்றம் சென்று நீதியை நிலைநாட்டி, நாடாளுமன்றத்தில் மீண்டும் நுழைந்தார் ராகுல் காந்தி.

அவருடைய வாதங்களுக்கு பதில் சொல்ல முடியாத மத்திய பா.ஜ.க. அரசின் அமைச்சர் ஸ்மிருதி இரானி அவர்கள், தன் பேச்சில் தி.மு.க. மீது அவதூறு சுமத்தி, திசை திருப்பும் வேலையைச் செய்ய நினைத்தார். நமது கழகத்தின் மக்களவை உறுப்பினர் – துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா சிறைக்கு அனுப்பப்படுவார் என்று பேசிய நிலையில், அதற்கு ஆ.ராசா உடனடியாக பதிலடி கொடுத்தார்.

“நான் கைது செய்யப்படப் போவதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மிரட்டுகிறார். இதன் மூலமாக நீதித்துறையை பா.ஜ.க. அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்று கூற வருகிறாரா?” என்று ஆ.இராசா நாடாளுமன்றத்தில் உரத்த குரலில் கேட்டதற்கு, ஆளுந்தரப்பில் உரிய பதில் தரப்படவில்லை. பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்கள், பா.ஜ.க.வின் மிரட்டலுக்கு அடிபணியாத கட்சிகள் இவற்றைக் குறி வைப்பதற்காகத்தானே அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை உள்ளிட்டவற்றை பா.ஜ.க. அரசு தன் கைப்பாவையாக பயன்படுத்தி வருகிறது என பல்வேறு விமர்சனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வைத்தார்.

unknown node