2024 நாடாளுமன்ற தேர்தலை கண்டு பாஜக பயப்பட ஆரம்பித்து விட்டது என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறு விளைவிக்கும் விதமாக பேசியாக குறிப்பிட்டு ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதும், அதனை தொடர்ந்து அவர் எம்பி பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதும் அரசியல் களத்தில் கடும் பேசுபொருளாக மாறியுள்ளது. காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி பலரும் தங்கள் தங்கள் எதிர்ப்பபை பதிவு செய்து வருகின்றனர்.
கர்நாடகாவில் புகார் இல்லை :
இந்த விவகாரம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், 2019இல் கர்நாடகாவில் பேசியது தொடர்பாக அம்மாநிலத்தில் யாரும் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை. குஜராத் எம்எல்ஏ புகார் கொடுத்து, அந்த வழக்கு சூரத் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, கடந்த 23ஆம் தேதி 2ஆண்டு சிறை தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து.
மத்திய அரசு அவசரம் :
அதுவும், தீர்ப்பு கொடுத்து மேல்முறையீடு செய்ய ஒருமாதம் அவகாசத்தை நீதிமன்றம் வழங்கியுள்ளது. அப்படி என்றால் தண்டனை இன்னும் செயல்படுத்தப்படவில்லை. ஒருமாதம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்குள், மதியா அரசு அவசரஅவசரமாக 24 மணிநேரத்தில் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் விமர்சனம் :
இது குறித்து அண்மையில் கூட ஒரு காங்கிரஸ் பெண் பிரபலம், பிரதமர் மோடி கூட தன்னை சூர்ப்பனகை என்று விமர்சித்தார் என்றும், இதனால் தான் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க போகிறான். அதற்கு காவல்துறை எவ்வளவு வேகமாக நடவடிக்கை எடுக்க போகிறது என்று நான் பார்க்கப்போகிறேன் என்று கூறுகிறார் என முத்தரசன் குறிப்பிட்டார்.
4 எழுத்தாளர்கள் சுட்டுக்கொலை :
மேலும், நாடு சரியான முறையில் நகரவில்லை. பாஜவுக்கு எதிராக கருத்து கூறிய 4 எழுத்தாளரக்ள் நமது நாட்டில் ஒரே மாதிரியாக சுட்டு கொல்லப்பட்டனர். சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அரசு நிறுவனங்கள் தவறானமுறையில் பயன்படுத்தப்படுகின்றன. என குற்றம் சாட்டினார்.
பாஜகவின் பயம் :
2019 நாடாளுமன்ற தேர்தல் போல 2024 தேர்தலில் வெற்றி பெற முடியாது என பாஜக பயப்பட ஆரம்பித்து பாசிச போக்கை கடைபிடித்து வருகிறது. இதனை கைவிட்டு, ராகுல் காந்தி தகுதிநீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் பேசினார்.