திமுக ஊழல் பட்டியல் மட்டுமல்ல இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஊழல் பட்டியலையும் பாஜக அண்ணாமலை வெளியிடுவார். – அர்ஜுன் சம்பத் பேச்சு.
நேற்று தூத்துக்குடியில் இந்து மக்கள் கட்சி சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதில் பேசிய அர்ஜுன் சம்பத், ஊழல் பட்டியல், தனி மாநிலம், இந்து மீனவர்கள் என பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.
ஊழல் பட்டியல் :
அந்த மாநாட்டில் பேசிய அர்ஜுன் சம்பத், ஏப்ரல் 14இல் திமுகவினரின் ஊழல் பட்டியலை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிடுவார். திமுக மட்டுமல்ல ஓபிஎஸ், இபிஎஸ் ஊழல் பட்டியலையும் அவர் வெளியிடுவார் என்றும், திராவிட கட்சிகளுக்கு மாற்று நாங்கள் (பாஜக) தான் எனவும் அவர் பேசினார்.
தனி மாநில தீர்மானம் :
மேலும், பிரதமர் மோடியின் ஆட்சி ஊழலுக்கு எதிரான ஆட்சி. நல்லாட்சி நாயகன் அணுவும் அவர் தனது கருத்தை தெரிவித்தார். அடுத்ததாக, அந்த மாநாட்டில், தென் மாவட்டங்களை அடக்கி தனி மாநிலம் உருவாக்க வேண்டும் எனவும், கடலோர இந்து மீனவர்களை பழங்குடியினராக அறிவிக்க கோர வேண்டும் எனவும், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.