நெருங்கும் சட்டமன்ற தேர்தல் ! தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை

The Chief Electoral Officer of Tamil Nadu will hold a consultation with the District Collectors who are conducting the election at 3 pm today.

தேர்தல் நடத்தும் அதிகாரிகளான மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று பிற்பகல் 3 மணிக்கு தமிழக  தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.எனவே வருகின்ற ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்நிலையில் இன்று தமிழகத்தின் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

.