நாகாலாந்தில் வெற்றி பிரதமர் மோடி ட்வீட்:
நாகாலாந்தில் பாஜக கூட்டணி வெற்றி குறித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். இரட்டை எஞ்சின் அரசாங்கம் மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபடும். இந்த முடிவை உறுதி செய்த பாரதீய ஜனதா கட்சி ஊழியர்களின் கடின உழைப்பை நான் பாராட்டுகிறேன் என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
unknown node2023-03-02 06:13 PM
என்டிபிபி வெற்றி :
தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி தலைவரும் நாகாலாந்து முதல்வருமான நெய்பியு ரியோ வடக்கு அங்கமி-II தொகுதியில் 15,824 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
2023-03-02 05:09 PM
காங்கிரஸ் வெற்றி :
திரிபுரா காங்கிரஸ் தலைவர் பிரஜித் சின்ஹா மாநில சட்டமன்ற தேர்தலில் கைலாஷாஹர் தொகுதியில் எம்.டி. அப்துல் மதின் (டிஎம்சி), மொபோஷர் அலி (பாஜக) மற்றும் ஜஹாங்கீர் அலி (என்சிபிஐ) ஆகியோரை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
2023-03-02 04:38 PM
சிபிஐஎம் கட்சி வெற்றி :
திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் சப்ரூம் தொகுதியில் பாஜகவின் சங்கர் ராயை தோற்கடித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) CPIM மாநிலச் செயலாளர் ஜிதேந்திர சவுத்ரி வெற்றி பெற்றார்.
2023-03-02 04:11 PM
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ முடிவுகள்: திரிபுரா
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ முடிவுகளின்படி, பாஜக 16 இடங்களில் வெற்றி பெற்று 17 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக கூட்டணி கட்சியான ஐபிஎஃப்டி 1 இடத்தில் வெற்றி பெற்றது.
2023-03-02 03:56 PM
நாகாலாந்து தேர்தல் :
நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தலில் என்டிபிபி-பாஜக கூட்டணி 15 இடங்களில் வெற்றி பெற்று 21 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
2023-03-02 03:45 PM
பாஜக அலுவலகத்தில் கொண்டாட்டம். :
திரிபுராவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 15ல் வெற்றி பெற்று 18ல் முன்னிலை பெற்றுள்ளதால் அகர்தலாவில் உள்ள பாஜக அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். முதல்வர் மாணிக் சாஹா, முன்னாள் முதல்வரும், கட்சியின் எம்பியுமான பிப்லாப் தேப் மற்றும் கட்சியின் தலைவர் சம்பித் பத்ரா ஆகியோர் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.
unknown node2023-03-02 03:30 PM
நாகாலாந்து தேர்தல் :
நாகாலாந்து முதல்வரும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (NDPP) தலைவருமான நெய்பியு ரியோ வடக்கு அங்கமி-II தொகுதியில் காங்கிரஸ் தலைவர் செய்விலி சச்சுவை தோற்கடித்து வெற்றி பெற்றார். ரியோ 15,646 வாக்குகள் பெற்றார், அவரது போட்டியாளர் 1,078 வாக்குகள் மட்டுமே பெற்றார்.இதற்கிடையில், நாகாலாந்து துணை முதல்வரும் பாஜக வேட்பாளருமான ஒய் பாட்டன் டியுய் தொகுதியில் 7,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
2023-03-02 02:50 PM
மேகாலயா தேர்தல் :
மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா “எங்களுக்கு ஒரு சில எண்கள் குறைவாக உள்ளன, எனவே இறுதி முடிவுகள் வெளிவரும் வரை நாங்கள் காத்திருப்போம். இறுதி முடிவுகளின் அடிப்படையில் என்ன அடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை நாங்கள் பார்ப்போம்” என்று கூறினார்.
unknown node2023-03-02 02:04 PM
சிபிஎம் வெற்றி:
திரிபுராவில் சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜிதேந்திர சவுத்ரி 343 வாக்குகள் வித்தியாசத்தில் சப்ரூம் தொகுதியில் வெற்றி பெற்றார்.
2023-03-02 01:46 PM
சட்டமன்ற தேர்தல் முடிவுகள் : திரிபுரா
ராம்நகர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் புருசுத்தம் ராய் பர்மன் தோல்வியடைந்தார்
திரிபுராவின் கல்வித்துறை அமைச்சர் பாஜகவின் ரத்தன் லால் நாத் மோகன்பூர் தொகுதியில் 7,385 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
சிபிஎம் வேட்பாளர் நயன் சர்க்கார் வடக்கு அகர்தலாவின் பமுடியா தொகுதியில் 1854 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் சிட்டிங் எம்எல்ஏ கிருஷ்ணதன் தாஸை தோற்கடித்தார்.
திரிபுராவின் பழங்குடி மக்கள் முன்னணியின் சுக்லா சரண் நோட்டியா, சிபிஎம் கட்சியின் தேபேந்திர திரிபுராவை 375 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
2023-03-02 01:41 PM
நாகாலாந்துக்கு முதல் பெண் எம்.எல்.ஏ :
தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி வேட்பாளர் ஹெகானி ஜகாலு, 1,536 வாக்குகள் வித்தியாசத்தில் திமாபூர்-III தொகுதியில் வெற்றி பெற்று, நாகாலாந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையை அடைந்தார்.
2023-03-02 01:35 PM
பாஜக-ஐபிஎஃப்டி கூட்டணி:
தேர்தல் ஆணையத்தின்படி, பாஜக-ஐபிஎஃப்டி கூட்டணி இதுவரை மொத்தம் நான்கு இடங்களைப் பெற்றுள்ளது. 3 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர், திரிபுராவின் பழங்குடி மக்கள் முன்னணி ஒரு இடத்தை கைப்பற்றியது.
2023-03-02 01:29 PM
பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கிறது :
திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா கூறுகையில், பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கிறது என்பதை முடிவுகள் காட்டுகின்றன. “பாஜக மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று நாங்கள் முன்பே கூறியிருந்தோம், இதுவரையிலான முடிவுகள் நாங்கள் ஆட்சி அமைக்கிறோம் என்பதைக் காட்டுகிறது. பிரதமர் மோடி, அமித் ஷா, ஜேபி நட்டா, ராஜ்நாத் சிங் மற்றும் அனைத்து கட்சி தொண்டர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.
2023-03-02 01:23 PM
ஷாமடோரில் வெற்றி :
சேசூர் சட்டமன்றத் தொகுதி ஷாமடோரில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி வேட்பாளர் எஸ் கியோசு யிம்சுங்கர் 2,295 வாக்குகள் வித்தியாசத்தில் லோக் ஜனசக்தி கட்சியின் (ராம் விலாஸ்) ஆர் தோஹன்பாவை தோற்கடித்தார்.
2023-03-02 01:15 PM
மேகாலயா தேர்தல் :
தேசிய மக்கள் கட்சி நர்தியாங் வெற்றி அக்கட்சியின் வேட்பாளர் ஸ்னியாவ்பலாங் தார் 2,123 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸின் எம்லாங் லாலூவை தோற்கடித்தார்.
2023-03-02 01:00 PM
நாகாலாந்து தேர்தல்:
தம்லுவில் இந்திய தேசிய காங்கிரஸ் (INC) முன்னிலை வகிக்கிறது.
2023-03-02 12:45 PM
இனிப்பு வழங்கி கொண்டாட்டம்:
பாஜக 60 இடங்களில் 33 இடங்களில் முன்னிலை பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைக்க உள்ளதால், அகர்தலாவில் உள்ள திரிபுரா முதல்வர் மாணிக் சாஹாவின் இல்லத்தில் இனிப்புகள் வழங்கப்பட்டன.
unknown node2023-03-02 12:38 PM
டிப்ரா மோதா வேட்பாளர் வெற்றி:
சிம்னா தொகுதியில் டிப்ரா மோதா வேட்பாளர் வெற்றி பெற்றார். திரிபுராவின் சிம்னா (எஸ்டி) தொகுதியில் டிப்ரா மோதா வேட்பாளர் பிரிஷகேது டெபர்மா 22,164 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
2023-03-02 12:31 PM
பாஜக ஆட்சியை தக்க வைக்கும் :
தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, திரிபுராவில் உள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளில் 33 இடங்களில் பாஜக முன்னிலை வகித்து ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும்.
2023-03-02 12:20 PM
பாஜக வேட்பாளர் அபிஷேக் டெப்ராய் வெற்றி:
திரிபுராவில் உள்ள மாதர்பாரி தொகுதியில் பாஜக வேட்பாளர் அபிஷேக் டெப்ராய் வெற்றி பெற்றார். 2018 திரிபுரா சட்டமன்றத் தேர்தலில், பாஜகவின் பிப்லப் குமார் கோஷ் இந்தத் தொகுதியில் சிபிஎம் கட்சியின் மாதப் சந்திர சாஹாவை 1569 வித்தியாசத்தில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2023-03-02 12:08 PM
தேசிய மக்கள் கட்சி முதல் வெற்றி:
மேகாலயா :நார்டியாங்கில் தேசிய மக்கள் கட்சி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் ஸ்னியாவ்பலாங் தர் 2123 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஸ்னியாவ்பலாங் தார் 16,969 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் எம்லாங் லாலு 14,846 வாக்குகளும் பெற்றனர்.
2023-03-02 11:53 AM
மேகாலயா தேர்தல்:
இதுவரை மொத்தமுள்ள 59 இடங்களில் 22 இடங்களில் தேசிய மக்கள் கட்சி முன்னிலை பெற்றுள்ளதால், துராவில் உள்ள முதல்வர் கான்ராட் சங்மாவின் இல்லத்தில் என்பிபி ஆதரவாளர்கள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
unknown node2023-03-02 11:45 AM
மேகாலயா தேர்தல்:
மேகாலயாவில் தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் கான்ராட் சங்மா தனது தெற்கு துரா தொகுதியில் முன்னிலை வகிக்கிறார், அதே நேரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் முகுல் சங்மாவும், தேசிய மக்கள் கட்சி (NPP) போட்டியாளரான சோங்சாக்கில் முன்னிலை பெற்றுள்ளார்.
2023-03-02 11:33 AM
திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா வெற்றி:
திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா போர்டோவாலி தொகுதியில் 832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸின் ஆஷிஸ் குமார் சாஹாவை தோற்கடித்தார்.
unknown node2023-03-02 11:30 AM
திரிபுரா தேர்தல்:
திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் சமீபத்திய போக்குகளின்படி, பாஜக 26 இடங்களிலும், சிபிஎம்-காங்கிரஸ் கூட்டணி 18 இடங்களிலும், திப்ரா மோதா 13 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
2023-03-02 11:23 AM
திரிபுரா தேர்தல்:
டவுன் பர்தோவாலி தொகுதியில், முதல்வர் மாணிக் சாஹா, 344 வாக்குகள் வித்தியாசத்தில், காங்கிரஸ் வேட்பாளர் ஆஷிஷ் குமார் சாஹாவை விட முன்னிலை பெற்றார். இதற்கிடையில், அகர்தலா தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சுதீப் ராய் பர்மன் பாஜகவின் பாபியா தத்தாவை விட 1,670 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
2023-03-02 11:14 AM
நாகாலாந்து முடிவுகள்:
திமாபூரில் பாஜக முன்னிலையிலும், சோக்போட்டில் (துரா) ஜிஎன்சி முன்னிலையிலும் உள்ளது.
2023-03-02 11:12 AM
மேகாலயா தேர்தல் முடிவுகள்:
சோங்சாக் தொகுதியில் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான முகுல் சங்மா முன்னிலை வகிக்கிறார்.
2023-03-02 11:08 AM
எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளிக்கும் கட்சியுடன் இணைந்து செயல்படுவோம்:
திரிபுராவில் திப்ரா மோதாவின் செய்தித் தொடர்பாளர் ஜிதன் டெபர்மா,”தேர்தலில் சிறப்பாகச் செயல்பட்டு அதிக இடங்களைப் பெறுவோம் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறினார். எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கும் கட்சியுடன் கட்சி செல்லும் என்றும் அவர் மேலும் கூறினார்.
2023-03-02 10:56 AM
மேகாலயா முடிவுகள்:
இதுவரை மொத்தம் உள்ள 59 இடங்களில் மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சி 23 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. வாக்கு எண்ணிக்கை இன்னும் நடந்து வருகிறது.
2023-03-02 10:46 AM
10:42 AM March 2:
கஸ்பா பெத்தில் எம்.வி.ஏ.வின் ரவீந்திர தோங்கேகர் முன்னிலை வகிக்கிறார். இரண்டாவது சுற்று தபால் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு, எம்.வி.ஏ-வின் ரவீந்திர தோங்கேகர் (8,631 வாக்குகள்) பாஜகவின் ஹேமந்த் ரசானேவை (6,964 வாக்குகள்)விட 1,667 எண்ணிக்கையில் முன்னிலை பெற்றுள்ளார்.
மத்திய அமைச்சர் பிரதிமா பௌமிக் தன்பூர் தொகுதியில் 123 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
10:37 AM March 2:
தெற்கு துரா தொகுதியில் மேகாலயா முதல்வர் கான்ராட் கே சங்மா முன்னிலை வகிக்கிறார். அரை மணி நேரத்திற்கு முன்பு பாஜக வேட்பாளர் பெர்னார்ட் என் மரக் முன்னிலை வகித்தார். தற்போது அவர் 44 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.
10:30 AM March 2:
திரிபுரா பாஜக தலைவர் ராஜீப் பட்டாச்சார்ஜி பனமாலிபூர் சட்டமன்றத் தொகுதியில் 493 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார். இன்னும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
10:24 AM March 2 திரிபுரா:
இடதுசாரி கட்சிகளும் இந்திய தேசிய காங்கிரஸும் கூட்டணியில் போட்டியிட்டு தற்போது 18 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.
09:59 AM March 2 நாகாலாந்த்:
தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி 11 இடங்களிலும், BJP ஒரு இடத்தில் வெற்றி பெற்று 3 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.
09:53 AM March 2 திரிபுரா:
பெரும்பான்மையுடன் பாஜக, தற்போது 31 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
9:45 AM March 2 மேகாலயா:
கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி தற்போது 26 இடங்களில் முன்னிலை வகிக்கிறது, டிஎம்சி 9 இடங்களில் முன்னிலை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது
9:34 AM March 2 திரிபுரா:
திரிபுராவில் பாஜக 39 இடங்களில் முன்னிலை வகிக்கிறது காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணி 14 இடங்களில் முன்னிலை மற்றும் திப்ரா மோதா கட்சி 6 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
நாகாலாந்து:
பாஜக 48 இடங்களில் முன்னிலை வகிக்கிறது நாகா மக்கள் முன்னணி 6 இடங்களில் முன்னிலை மற்றும் காங்கிரஸ் 1 இடத்திலும் மற்றவைகள் 5 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
மேகாலயா:
தேசிய மக்கள் கட்சி 22 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 11 இடங்கள் மற்றும் பாஜக 10 இடங்களில் முன்னிலையிலும் ஐக்கிய ஜனநாயக கட்சி 7 காங்கிரஸ் 6 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காலை 8 மணிக்கு தொடங்கி முடிவுகள் வெளியாகி வருகின்றன.
மூன்று மாநிலங்களில் உள்ள 178 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 16 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
நாகாலாந்தில் 60 இடங்கள் உள்ள நிலையில், ஒரு தொகுதியில் (அகுலுடோ) பாரதிய ஜனதா போட்டியின்றி வெற்றி பெற்றதால், 59 இடங்களில் தேர்தல் நடத்தப்பட்டது.மேகாலயாவிலும், ஒரு தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், மொத்த எண்ணிக்கை 60ல் இருந்து 59 ஆக குறைந்துள்ளது.