அசாம்-மிசோரம் எல்லை பிரச்சனை : பிரதமர் நரேந்திர மோடி இன்று அசாம் எம்.பி.க்களை சந்திக்கிறார்!

Prime Minister Narendra Modi today met Assam MPs over the Assam-Mizoram border issue.

அசாம்-மிசோரம் எல்லை பிரச்சனை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அசாம் எம்.பி.க்களை சந்திக்கிறார்.

வடகிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும் மிசோரம் இடையே தொடர்ந்து எல்லை பிரச்சனை நிலவி வருகிறது. இந்நிலையில் இதன் காரணமாக அண்மையில் நடைபெற்ற மோதலில் அசாம் மாநிலத்தை சேர்ந்த 6 போலீசார் பலியாகினர். மேலும், பொதுமக்கள் 50 -க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில் அசாம்-மிசோரம் எல்லையில் கடும் பதற்றம் ஏற்பட்டது.

இதனையடுத்து நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அசாம் மற்றும் மிசோரம் முதலமைச்சருடன் பதற்றத்தை தணிக்கும் வகையாக தொலைபேசியில் உரையாடினார். இந்நிலையில், இன்றும் அசாம் மிசோரம் எல்லை பிரச்சனை தொடர்பாக அசாம் எம்.பிக்களை சந்தித்து பிரதமர் மோடி அவர்கள் பேச உள்ளார்.