காலங்கள் மாறும்போது, கூட்டணிகள் மாறும்போது, சூழ்நிலைக்கு ஏற்றவாறு கருத்துக்ககளும் மாறும். தற்போதைய சமயத்தில் தவறான கருத்துகளாக பார்க்கப்படும் கருத்துக்கள், அப்போது சரியாக இருந்திருக்கலாம். – இவிகேஎஸ்.இளங்கோவன்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி வேட்பாளராக களமிறங்கு சுமார் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார் இ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
முதல்வருடன் சந்திப்பு :இந்த வெற்றியை அடுத்து, இன்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை,ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இளங்கோவன் நேரில் சந்தித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், முதல்வர் , இடைத்தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார் என கூறினார்.
கருத்துக்கள் மாறும் :அவர் மேலும் கூறுகையில், காலங்கள் மாறும்போது, கூட்டணிகள் மாறும்போது, சூழ்நிலைக்கு ஏற்றவாறு கருத்துக்ககளும் மாறும். தற்போதைய சமயத்தில் தவறான கருத்துகளாக பார்க்கப்படும் கருத்துக்கள், அப்போது சரியாக இருந்திருக்கலாம். ஆனால், அது அந்த சூழ்நிலைக்கான கருத்துக்களே என இவிகேஎஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வெற்றியை அடுத்து மீண்டும் காங்கிரஸ் தலைமை பொறுப்பு உங்களுக்கு வருமா என கேட்டபோது, இப்போது தலைவராக (கே.எஸ்.அழகிரி) இருபவவரே நன்றாக செயல்பட்டு வருகிறார் பிறகு ஏன் மாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.
அடுத்ததாக, திமுக கூட்டணி இல்லை என்றால், காங்கிரஸ் டெபாசிட் கூட வாங்கி இருக்காது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியது பற்றி கேட்கையில், ஜெயக்குமார் தினமும் ஏதேனும் கெட்ட கனவு காண்கிறார். அதனை வெளியில் சொல்கிறார் எனவும், அவர் மீது நிறைய வழக்குகள் இருக்கிறது. அதன் மீது கவனம் செலுத்த சொல்லுங்கள் என கூறிவிட்டு சென்றார் ஈரோடு கிழக்கு தொகுதி புதிய எம்எல்ஏ இ.வி.கே.எஸ்.இளங்கோவன்.