ஆர்யன் கான் ஜாமீன் : 14 பிணை நிபந்தனைகள் விதிப்பு ...!

The Supreme Court has ordered the imposition of 14 conditions on the bail of Aryan Khan, who has been released on bail.

ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள ஆர்யன் கானின் ஜாமீன் மீது 14 நிபந்தனைகளை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சொகுசு கப்பல் போதை விருந்து தொடர்பாக நடிகர் ஷாருக்கானின் மகன் உள்ளிட்ட சிலரை அக்டோபர் 3 ஆம் தேதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 8 ஆம் தேதி முதல் ஆர்தர் ரோடு சிறையில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் அவர்கள் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என இரண்டு முறை ஆர்யன் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் இரண்டு முறையும் இவரது ஜாமீன் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதன்பின் தனக்கு ஜாமீன் வழங்க கோரி மூன்றாவது முறையாக மும்பை ஐகோர்ட்டில் இவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த ஜாமீன் மனுவை ஏற்றுக்கொண்ட மும்பை ஐகோர்ட் ஆர்யன் கானுக்கு 28 ஆம் தேதி ஜாமீன் வழங்கியது. மேலும், இந்த ஜாமீன் மனு மீதான 14 நிபந்தனைகளையும் நேற்று மும்பை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன்படி ஆர்யன் ஒரு லட்சம் மதிப்பிலான உத்தரவாதம் மற்றும் அதற்கு இணையாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பிணை செலுத்தி ஜாமீன் பெறலாம்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் தொடர்பு கொள்ளக் கூடாது. மேலும் வழக்கில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புடையவர்களுடன் தொடர்பில் இருக்க கூடாது. இதே போன்ற குற்றங்களில் மீண்டும் ஈடுபடக்கூடாது. சாட்சிகளை கலைக்கவோ, அழிக்கவோ முயற்சி செய்யக்கூடாது. சிறப்பு நீதிமன்றத்தில் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து மீடியாக்களில் அறிக்கை வெளியிடக் கூடாது.

போதை பொருள் தடுப்பு நீதிமன்ற சிறப்பு நீதிபதி அனுமதி இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது. மும்பையை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்றாலும் கூட விசாரணை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் அதற்கான காரணத்தையும் அறிவிக்க வேண்டும். போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நண்பகல் 11 முதல் 2 மணி வரை ஆஜராக வேண்டும்.

நீதிமன்ற விசாரணையின் பொழுது ஒவ்வொரு நாளும் ஆஜராக வேண்டும். விசாரணை நடக்கும் பொழுதெல்லாம் ஆஜராக வேண்டும். விசாரணையை தொடங்கிய பின்பு அதனை தாமதப்படுத்தக் கூடாது. நீதிமன்றத்தில் நடவடிக்கைக்கு பாதகமான செயல்களில் ஈடுபடக் கூடாது. மேலும் இந்த விதிமுறைகளில் ஏதாவது மூன்று விதிகள் மீறப்பட்டால் ஜாமீனை ரத்து செய்ய சிறப்பு நீதிமன்ற அதிகாரிகள் நாடலாம் என அந்த நிபந்தனைகளில் கூறப்பட்டுள்ளது.