கோவா தேர்தலின் போது விதிகளை மீறியதாக ஆம் ஆத்மி கட்சி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு , அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 2022ஆம் கோவா சட்ட சபை தேர்தலில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டு 2 இடங்களை கைப்பற்றியது. அக்கட்சி விதிகள் மீறி செயல்பட்டதாக கூறி கோவா போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கோவா ஆம் ஆத்மி கட்சி தலைவர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
வழக்குப்பதிவு :
unknown node2022 கோவா சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது விதிகள் மீறி பொது இடங்களில் போஸ்டர் ஒட்டியதாக ஆம் ஆத்மி கட்சியினர் மீது கோவா, பெர்னெம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 41 (ஏ) பிரிவின் கீழ், ஆம் ஆத்மி கட்சியின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கெஜ்ரிவாலுக்கு சம்மன் :
unknown nodeமேற்கூறிய சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பெர்னெம் காவல் நிலைய ஆய்வாளர் திலிப்குமார் ஹலர்ன்கர் சம்மன் அனுப்பியுள்ளார். அதில், அரவிந்த் கெஜ்ரிவால் வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி காலை 11 மணிக்கு பெர்னெம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆஜராகவில்லை :
unknown nodeஇதற்கு முன்னதாக, ஆம் ஆத்மி கோவா மாநில தலைவர் அமித் பலேகருக்கு கடந்த வியாழன் காலை 11.30 மணிக்கு பெர்னெம் காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். ஆனால், அவர் ஆஜராகவில்லை என்று காவல்துறையினர் குறிப்பிட்டனர்.