சர்வதேச விருதை தட்டிச்சென்ற RRR படகுழுவுக்கு வாழ்த்து தெரிவித்த டெல்லி முதல்வர்.!

கோல்டன் குளோப் சர்வதேச விருதை வென்ற RRR படக்குழுவுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.

கோல்டன் குளோப் சர்வதேச விருதை வென்ற RRR படக்குழுவுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.

சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான கோல்டன் குளோப் விருது பட்டியலில் கடந்த ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் பான் இந்தியா படமாக வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த RRR படத்தில் கீரவாணி இசையில் இடம்பெற்ற நாட்டு நாட்டு எனும் பாடலுக்கு விருது வழங்கி கௌரவிக்கபட்டது.

ஆசியாவிலே முதன் முறையாக ஒரு பாடலுக்கு இந்த விருது கிடைத்து இருப்பது இதுவே முதல்முறை என்பதால், இந்திய அளவில் பெரும் சினிமா பிரபலங்கள் உடபட பல அரசியல் தலைவர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் தனது வாழ்த்தினை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘ இந்த அற்புதமான சாதனைக்காக RRR இன் நடிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். உலக அரங்கில் நமது கலை அங்கீகாரம் பெறுவதை விட, நமது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் தருணம். ‘ என வாழ்த்தி இருந்தார்.

unknown node
சர்வதேச விருதை தட்டிச்சென்ற RRR படகுழுவுக்கு வாழ்த்து தெரிவித்த டெல்லி முதல்வர்.!