மக்கள் நிம்மதியாக உறங்க காரணம் ராணுவ வீரர்கள் தான் – பிரதமர் புகழாரம்!

Prime Minister Modi has spoken among the soldiers that the reason people sleep peacefully is because of the soldiers.

மக்கள் நிம்மதியாக உறங்க காரணம் ராணுவ வீரர்கள் தான் என பிரதமர் மோடி ராணுவ வீரர்கள் மத்தியில் பேசியுள்ளார்.

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரதமர் மோடி அவர்கள் தனது தீபாவளி கொண்டாட்டத்தை காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடியுள்ளார். இந்த கொண்டாட்டத்தின் போது ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி அவர்கள், ஒவ்வொரு தீபாவளியின் போது நமது எல்லைகளைப் பாதுகாக்கும் வீரர்களுடன் நான் கொண்டாடி வருகிறேன்.

இன்று நமது வீரர்களுக்காக கோடிக்கணக்கான இந்தியர்களின் ஆசியை என்னுடன் கொண்டு வந்துள்ளேன். நமது பாரத மாதாவின் அணிகலன்கள் நீங்கள், உங்களால் தான் நம் நாடு நிம்மதியாக உறங்குகிறது. மேலும் பண்டிகை காலங்களில் மகிழ்ச்சியும் நிலவுகிறது. உங்களது பணியால் இந்தியா பெருமை அடைகிறது என தெரிவித்துள்ளார்.