சென்னை : தீபாவளி பண்டிகை (தீப ஒளித் திருநாள்) அன்று (அக்.31) இரண்டு மணி நேரம் பட்டாசு வெடிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், குறைந்த ஒலி, மாசு ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகளை வெடிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம். பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுப்படுத்தும் தன்மை […]
தீபாவளி பண்டிகையை நேற்று மக்கள் மற்றும் கோலாகலமாக புது உடைகள் அணிந்து பட்டாசுகள் வெடித்து கொண்டாடினார்கள். அந்த வகையில், பிரபல நடிகரான சிவகுமாரின் குடும்பமும், ராதிகாவின் குடும்பமும் இந்த முறை தீபாவளியை இணைந்து கொண்டாடியுள்ளனர். அட ஆமாங்க.. நடிகர் சூர்யா, ஜோதிகா, கார்த்தி, ராதிகா, பிருந்தா ஆகியோர் இந்த தீபாவளியை ஆட்டம் பாட்டத்துடன் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். ராதிகா குடும்பத்தினருடன் நடிகர் கார்த்தி புல்லட் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளனர். அதற்கான வீடியோவை நடிகை ராதிகா தனது ட்வீட்டர் பக்கத்தில் […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை தீவுத்திடலில் 15 நாள் பட்டாசு விற்பனை என அறிவிப்பு. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் அக்டோபர் 11ம் தேதி முதல் 25ம் தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும் என சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. 2022-ஆம் ஆண்டு தீபாவளிக்காக சென்னை தீவுத்திடலில் 55 பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு கடைக்கும் இடையே 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் எனவும் தமிழக சுற்றுலாத்துறை நிபந்தனை விதித்துள்ளது.
சென்னை:தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 இலட்சத்து 57 ஆயிரம் பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளதாகவும், இதன் வாயிலாக மொத்தமாக 8 கோடியே 37 இலட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல். தீபாவளித் திருநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் கடந்த 7 நாட்களில், மொத்தமாக இயக்கப்பட்ட 28,844 பேருந்துகள் வாயிலாக, 14,24,649 பயணிகள் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,போக்குவரத்துத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: […]
மக்கள் நிம்மதியாக உறங்க காரணம் ராணுவ வீரர்கள் தான் என பிரதமர் மோடி ராணுவ வீரர்கள் மத்தியில் பேசியுள்ளார். நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரதமர் மோடி அவர்கள் தனது தீபாவளி கொண்டாட்டத்தை காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடியுள்ளார். இந்த கொண்டாட்டத்தின் போது ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி அவர்கள், ஒவ்வொரு தீபாவளியின் போது நமது எல்லைகளைப் பாதுகாக்கும் வீரர்களுடன் நான் கொண்டாடி வருகிறேன். […]
சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 294 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தீபாவளி தினமான இன்று பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்றைய தினம் காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தமிழகத்தில் பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் உச்ச நீதிமன்றத்தால் தடை […]
முதலமைச்சர் ஏன் தீபாவளிக்கு வாழ்த்து சொல்லவில்லை என மத்திய இணை மந்திரி எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய இணை மந்திரி எல்.முருகன் அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு தீபாவளி பரிசாக பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது மகிழ்ச்சி. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் பயன் அடைவார்கள். அது போல மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு வாட் வரியை குறைக்க வேண்டும் என […]
பிரதமர் மோடி அவர்கள் இந்த ஆண்டும் ராஜோரி மாவட்டத்தில் உள்ள ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் கடந்த சில ஆண்டுகள் தீபாவளியை ராணுவ வீரர்களுடன் கொண்டாடி வருகிறார். அந்த வகையில் 2019 ஆம் ஆண்டில், ரஜோரியில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் பிரதமர் தீபாவளியைக் கொண்டாடினார். இந்நிலையில் இந்த ஆண்டும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ராஜோரி […]
பிக் பாஸ் வீட்டிற்குள் இன்று தீபாவளியை கொண்டாட்டத்திற்காக விஜய் டிவி பிரபலங்கள் சிலர் வந்துள்ளனர். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 5 வாரங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 14 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் இன்று தீபாவளி கொண்டாட்டம் பிக்பாஸ் வீட்டிலும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த கொண்டாட்டத்திற்காக விஜய் டிவி பிரபலங்கள் சிலர் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளனர். இருப்பினும் அவர்கள் கண்ணாடி அறைக்குள் வைத்து அடைக்கப்பட்டுள்ளனர். […]
அறியாமை இருளை அகற்றி அறிவொளி எனும் தீபத்தை இத்திருநாள் ஒளிரச் செய்யட்டும் என ஆளுநர் ரவி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாளை நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழ்நாடு மற்றும் நம் தாய் திருநாட்டின் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது இனிய மற்றும் பசுமை நிறைந்த […]
தீபாவளி பண்டிகையையொட்டி மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிப்பூ கிலோ 2000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாளை நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கடந்த வாரம் கிலோ 800 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிப்பூ, மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் தற்போது கிலோ 2000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலம் என்றாலே பூக்களின் விலை அதிகரிப்பது வழக்கம் தான். ஆனால், தற்போது மழையும் அதிக அளவில் இருப்பதால் பூக்களின் வரத்து குறைந்துள்ளதாகவும், அதன் […]
தீபாவளியை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. தீபாவளியை முன்னிட்டு வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக 3 சிறப்பு ரயில்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், வழக்கமாக இயக்கப்படும் ரயில்களின் பயண சீட்டு முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாகவும், இதனால் 20க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அது மட்டுமன்றி தாம்பரம் முதல் நாகர்கோவில், […]
தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பட்டாசும் பலகாரமும் தான். அதிகாலையில் எழுந்து குளித்து, புத்தாடைகள் அணிந்து கோவிலுக்கு செல்வது ஒரு புறம் இருந்தாலும் நாள் முழுவதும் பட்டாசு வெடித்து பலகாரங்களை உண்பது தான் தீபாவளியின் சிறப்பம்சமாக இருந்து வருகிறது. ஆனால் அந்த ஒரு நாளை அனுபவிப்பதற்காக மற்ற நாட்களை சங்கடப்படுத்தி விடக்கூடாது. அதாவது, ஆரோக்கியமான உணவு கட்டுப்பாடுடன் இருக்கக்கூடிய நபர்கள் அனைவருமே தீபாவளி வந்துவிட்டாலே கட்டுப்பாடின்றி பலகாரங்களை உண்ண தொடங்கி விடுகின்றனர். இதனால் சிலர் நோய்வாய்ப்பட […]
இன்று முதல் தமிழகத்தில் தீபாவளிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. வருகின்ற 14 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்த திருநாளில் மக்கள் அனைவருமே மகிழ்ச்சியாக தங்களது சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என விரும்புவது வழக்கம். இதற்காக எப்பொழுதுமே சிறப்பாக பேருந்துகள் இயக்கப்படும். ஆனால், இந்த வருடன் கொரோனா ஊரடங்கு போடப்பட்டு சமூக இடைவெளி கடைபிடிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழகம் முழுவதிலும் சிறப்பு ரயில்கள் வழக்கம் போல இயக்கப்படுகிறது. சில இடங்களில் கூடுதலாகவும் இயக்கப்படுகிறது, […]