ஸ்டாலினா ?ரஜினியா?வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி இவருக்குத்தான் -அர்ஜுன் சம்பத் பேட்டி

கடந்த 2017 ஆண்டு டிசம்பர் மாதம் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை ராகவேந்திர மண்டபத்தில் சந்தித்தார்.

கடந்த 2017 ஆண்டு டிசம்பர் மாதம் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை ராகவேந்திர மண்டபத்தில் சந்தித்தார்.

unknown node

சட்டப்பேரவை தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நிற்க முடிவு செய்துள்ளேன். உள்ளாட்சித் தேர்தலில் நிற்கப் போவதில்லை என்று ரசிகர்கள் மத்தியில் பேசினார்.இது முதலே ரஜினியின் அரசியல் எதிர்பார்ப்பு அதிகரித்தது.ஆனால் அதன் பிறகு பெரிதாக அவர் ஏதும் கூறவில்லை.

அதேபோல் அப்போது போர் வந்தால் பார்த்துக் கொள்வோம் என்று கூறி தன் ரசிகர்களை ஆரவாரமாக வைத்திருந்தவர்  தமிழகத்தில் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்ற போதிலும் தேர்தலிலும் போட்டியிட மாட்டோம் எனவும் அறிவித்தார். இதன் மூலம் போர் வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறிய அவர் போர்க்களத்தில் நின்று கொண்டு நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறார் என அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

unknown node

இந்த நிலையில்  விருதுநகரில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி போட்டியிடுவார் .அப்போது முதலமைச்சர் பதவிக்கு  ரஜினிக்கும் , ஸ்டாலினுக்கும் இடையேதான் போட்டியாக இருக்கும் என்று கூறினார்.மேலும் ரஜினியின் ஆட்சி ராஜராஜ சோழனின் ஆட்சியை போல இருக்கும் என்று கூறியுள்ளார்.  கமலின் கொள்கை கம்யூனிச கொள்கை என்றும் விமர்சித்துள்ளார்.