இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – டிடிவி

ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட சிறுவர்கள் 3 பேர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது என டிடிவி

ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட சிறுவர்கள் 3 பேர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது என டிடிவி தினகரன் ட்வீட்.

திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி அருகே ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட சிறுவர்கள் 3 பேர்  உயிரிழந்துள்ளனர். மேலும் சில குழந்தைகள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இதுகுறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி அருகே ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட சிறுவர்கள் 3 பேர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு சரியான சிகிச்சை அளிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். இச்சம்பவம் குறித்து முறையான விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

unknown node