தமிழகத்தில் 37 அரசு கல்லூரிகளில் புதிய முதல்வர்களை நியமித்து, உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 37 அரசு கலை அறிவியல், கல்வியியல், ஒட்டி தேர்வு பயிற்சி கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு கல்லூரிகளிகளில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர்கள் முதல்வர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள முதல்வர்கள் உடனடியாக பணிக்கு சேருமாறு உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார். பெரம்பலூர், ஓசூர், கொடைக்கானல், நாகர்கோவில், தேனி கலை & அறிவியல் கல்லூரிகளுக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர், அவிநாசி, சங்கரன்கோவில், தரங்கம்பட்டி, வானூர் அரசு கல்லூரிகளுக்கும் புதிய முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.