செங்கோட்டையில் நடந்த வன்முறை தொடர்பாக மற்றொரு நபர் கைது

Another person has been arrested in connection with the violence at Red Fort

குடியரசு தின டிராக்டர் பேரணியின் போது செங்கோட்டையில் நடந்த வன்முறை தொடர்பாக மற்றொரு நபரை டெல்லி காவல்துறையினர்  திங்கள்கிழமை கைது செய்தனர்.

ஜனவரி 26 வன்முறையின் போது செங்கோட்டையில் வாள் சுற்றியதாக மனிந்தர் சிங்கை டெல்லி காவல்துறையினர் கைது செய்த ஒரு வாரத்திற்குப் பிறகு 29 வயதான ஜஸ்பிரீத் சிங் என்ற நபர் (திங்கள்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜஸ்பிரீத் சிங் மற்றும் மனிந்தர் சிங் இருவரும் டெல்லியின் ஸ்வரூப் நகரில் வசிப்பவர்கள். மனிந்தர் சிங் ஸ்வரூப் நகரில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் வாள் பயிற்சிப் பள்ளியை நடத்தி வருகிறார், மேலும் கார் ஏசி மெக்கானிக்காக பணிபுரிகிறார்.

இது குறித்து டெல்லி போலீசார் கூறுகையில் , ஜனவரி 26 வன்முறையின் போது ஜஸ்பிரீத் சிங் செங்கோட்டையின் மீது ஏறி கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் செங்கோட்டையில் சேதத்தை ஏற்படுத்துவது போல் இருக்கிறது என்று டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட ஜஸ்பிரீத் சிங் இரண்டு நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.