விளைப்பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்தல், விவசாய கடன் தள்ளுபடி, மின்சாரம் திருத்த சட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாப், உத்தரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாய அமைப்பினர் டெல்லி சலோ பேரணியை கடந்த வாரம் தொடங்கிய நிலையில், பஞ்சாப் – ஹரியானா எல்லையான ஷம்பு பகுதியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தி குவிந்து வருகின்றனர். இருப்பினும், […]
வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவு விலை நிர்ணயிக்க சட்டம் இயற்ற வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மின்சார திருத்த சட்டம் 2020ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் போராட்டம் – அமித் ஷா டெல்லியில் அவசர ஆலோசனை! குறிப்பாக பஞ்சாப் , ஹரியானா உள்ளிட்ட வடமாநில விவசாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் டெல்லியினை நோக்கி […]
விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லிக்கு பேரணியாக செல்வதாக அறிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, கடந்த செவ்வாய்கிழமை முதல் விவசாயிகள் டெல்லி நோக்கி செல்கின்றனர். அவர்களை தடுக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் தோட்டாக்களையும் வீசினர்.இதில் சில விவசாயிகள் காயம் அடைந்தனர். போலீசாரின் இந்த செயலால் விவசாயிகள் மத்தியில் கொதிப்பு ஏற்பட்டுள்ளது. ஷம்பு எல்லையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், விவசாய சங்க தலைவர் சர்வான் சிங் பாந்தர் கூறுகையில்” விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியது […]
விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேச உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாய அமைப்பினர் டெல்லியை நோக்கி சலோ டெல்லி என்ற பேரணியை நேற்று முன்தினம் தொடங்கினர். கடந்த முறை போன்று இம்முறை விவசாயிகள் போராட்டம் வெடித்துவிட கூடாது என்று டெல்லிக்குள் நுழையும் வழியெல்லாம் தீவிர தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனால், எல்லைகளில் விவசாயிகளால் குவிந்துள்ளனர். மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், தடுப்புகளை […]
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய புதிய சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறுகோரிக்கைகளை மத்திய அரசுக்குவலியுறுத்திய பல்வேறு மாநில விவசாயிகள் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி அன்று ‘டெல்லி சலோ ‘ என்ற பெயரில் டெல்லியை நோக்கி பேரணியை மேற்கொண்டனர். டெல்லி உயர்நீதிமன்றத்திற்க்கு வெடிகுண்டு மிரட்டல்.! பாதுகாப்பு தீவிரம்…. டெல்லியை நோக்கி விவசாயிகள் வருவதை தடுக்க டெல்லியை சுற்றியுள்ள எல்லைப் பகுதியில் காவல்துறையினர் தடுப்பு வேலிகளை அமைத்திருந்தனர். அந்த தடுப்புகளை மீறி விவசாயிகள் டெல்லி […]
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக துபாய் சென்றுள்ளார். அங்கு புதியதாக கட்டப்பட்டுள்ள இந்து கோயிலை பிரதமர் திறந்து வைக்க உள்ளார். டெல்லியில் இன்று இரண்டாவது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இவ்வாறான பல்வேறு நிகழ்வுகளை இந்த நேரலை குறிப்பில் காணலாம்…
செங்கோட்டை கலவர வழக்கில் நடிகர் தீப் சித்துவுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த ஜனவரி 26-ஆம் தேதி அன்று நடத்திய டிராக்டர் அணிவகுப்பின் போது செங்கோட்டை மற்றும் டெல்லிக்குள் வன்முறை ஏற்பட்டது. இந்த வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்ட நடிகர் தீப் சித்துவுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது என்று ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, தீப் சித்து தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் […]
மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார், ஆனால் தங்களது கோரிக்கையில் எந்த மாற்றமும் இருக்காது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து, தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் பல விவசாயிகள் உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில் இந்த போராட்டம் குறித்த மத்திய அரசுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், எந்த பேச்சுவார்த்தையிலும் இதற்கு தீர்வு எட்டப்படவில்லை. தற்போது […]
நாட்டுக்கு தேவை இல்லாத இந்திய விவசாய சட்டம் என்று பொருள் கொள்ளுமாறு, வேளாண் சட்ட நகல்களை விவாசாயிகள் தீயிட்டு எரித்துள்ளனர். பல இடங்களில் கொரோனா பரவல் காரணமாக கோலி பண்டிகை சில கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நான்கு மாதங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, டெல்லியில் முகாமிட்டுள்ள விவசாயிகள் நேற்று ‘ஹோலிகான் தஹான்’ என்ற பாரம்பரிய விழாவை கொண்டாடினர். இந்த விழாவில் வழக்கம் என்னவென்றால், ஹோலி பண்டிகையின் […]
குடியரசு தின டிராக்டர் பேரணியின் போது செங்கோட்டையில் நடந்த வன்முறை தொடர்பாக மற்றொரு நபரை டெல்லி காவல்துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர். ஜனவரி 26 வன்முறையின் போது செங்கோட்டையில் வாள் சுற்றியதாக மனிந்தர் சிங்கை டெல்லி காவல்துறையினர் கைது செய்த ஒரு வாரத்திற்குப் பிறகு 29 வயதான ஜஸ்பிரீத் சிங் என்ற நபர் (திங்கள்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். ஜஸ்பிரீத் சிங் மற்றும் மனிந்தர் சிங் இருவரும் டெல்லியின் ஸ்வரூப் நகரில் வசிப்பவர்கள். மனிந்தர் சிங் ஸ்வரூப் நகரில் […]
புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி டெல்லியில் எல்லை பகுதிகளில் 78 நாட்களாக பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் போராடு வருகின்றனர்.இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா ஏன் இதை பற்றி யாரும் பேசுவதில்லை என்று ட்வீட் செய்திருந்தார். சர்ச்சைக்குரிய ட்வீட் : அத பின்னர் ரிஹானா ட்வீட் க்கு பதிலடி கொடுக்கும் விதமாக கங்கனா ரணாவத் சர்ச்சைக்குரிய ட்வீட் செய்திருந்தார்.அதில் டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் […]
மக்களுக்கு போராடுவதற்கான உரிமை உள்ளது. மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. விவசாயிகளிடம் வேளாண் சட்டங்களை ஏற்றுக்கொள்ள செல்வது தற்கொலைக்குச் சமம். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து, தலைநகர் டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் கடந்த குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். இதில் பெரும் சர்ச்சை […]
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் 2 மாதங்களாக போராடிவருகின்றனர். கடந்த 26-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற டிராக்டர் பேரணி வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து ஏறக்குறைய 5 விவசாய சங்கங்கள் போராட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளது. இந்நிலையில், டெல்லியில் நடந்தது சம்பவம் போன்று உத்தரபிரதேசத்திலும் நடந்து விடக்கூடாது என்பதற்க்காக உத்தரபிரதேச அரசு காசிப்பூர் எல்லையில் உள்ள விவசாயிகள் அகற்ற முடிவு செய்தது. ஆனால், காசிப்பூர் எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை அந்த […]
குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியின் போது நடந்த வன்முறை தொடர்பாக டெல்லி போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.இந்த எஃப்.ஐ.ஆரில் பாரதிய கிசான் யூனியன் (பி.கே.யூ) தலைவர் ராகேஷ் டிக்கைட்டை கைது செய்ய உத்தரபிரதேச காவல்துறை வந்தது,ஆனால் அவரை கைது செய்யவிடாமல் அவரை ஏராளமான ஆதரவாளர்கள் சூழ்ந்திருந்ததால் காவல்துறையின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதுகுறித்து ராகேஷ் டிக்கைட் கூறுகையில் நீதிமன்ற கைது அமைதியாக இருக்க வேண்டும்.இவர்களின் நடவடிக்கை வன்முறையைத் தூண்டும் திட்டம் இருப்பதாகத் தெரிகிறது. அத்தகைய திட்டம் ஏதேனும் […]
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் 2 மாதத்திற்கு மேலாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வியை சந்தித்த நிலையில், நேற்று குடியரசு தினத்தன்று டெல்லிக்குள் டிராக்டர் பேரணியை நடத்துவதாக விவசாயிகள் அறிவித்தனர். இதற்கு போலீசார் முதலில் அனுமதி மறுக்க, பின்னர் 12 மணிக்கு பிறகு பேரணியை நடத்த அனுமதி வழங்கினார். இந்நிலையில், போலீசாரின் அனுமதியை விவசாயிகளில் ஒரு தரப்பினர் ஏற்று கொள்ள, மற்றொரு தரப்பினர் காலை 9 மணிஅளவில் தடுப்புகளை […]
டெல்லி:நாட்டின் 72 ஆவது குடியரசு தினத்தன்று இதுவரை இல்லாத வகையில் குழப்பம் மற்றும் வன்முறை காட்சிகளை டெல்லி கண்டது – நகரத்தின் எல்லைகளைச் சுற்றி அமைதியான டிராக்டர் பேரணியாக இருக்க வேண்டிய சமயத்தில் மையத்தின் விவசாய சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகளுக்கும் போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. செய்தி நிறுவனமான ANI தனது ட்விட்டர் தனது பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், போலீஸ் மற்றும் துணை ராணுவ வீரர்கள் செங்கோட்டை வளாகத்தில் 15 […]
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை வரும் திங்கட்கிழமை (ஜனவரி 11 )நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழக்கறிஞர் எம்எல் ஷர்மா உள்ளிட்டோரின் வழக்கு மீதான விசாரணையை தலைமை நீதிபதி அமர்வு ஒத்திவைத்தது. விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தொடர்பான பேச்சுவார்த்தையில் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை என தலைமை நீதிபதி கவலை தெரிவித்தனர். வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், குறைந்த பட்ச ஆதார விலையை சட்ட ரீதியாக உறுதிபடுத்த […]
டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தால், சுமார் ரூ.27 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி மற்றும் அதன் அண்டை மாநிலங்களான உத்திரபிரதேசம், ஹரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் ஒரு மாதத்திற்கு மேலாக இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பலமுறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் இதற்கு ஒரு […]
வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பாக இன்று மதியம் 2 மணிக்கு விவசாய அமைப்புகளுக்கு மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், இன்று 35 ஆம் நாளாக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கேயே அவர்கள் உணவு சமைத்து, அதனை உண்டும் வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், […]
8 வழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள், தங்களின் குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் – சென்னை இடையே ரூ.10,000 கோடி செலவில் 277 கி.மீ தொலைவிற்கு 8 வழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் விவசாயிகள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சாலை அமைக்கப்பட்டால், அப்பகுதியில் உள்ள விவசாய நிலம், காடுகள், நீர் நிலைகள் பாதிக்கும் என […]