#DMKFiles : கனிமொழி, கலாநிதி மாறன், கே.என்.நேரு, டி.ஆர்.பாலு அண்ணாமலை வெளியிட்ட லிஸ்ட் இதோ....

திமுக எம்.பிக்கள், அமைச்சர்கள் குறித்து அவரது சொத்துக்கள் என அண்ணாமலை வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், கனிமொழி, கலாநிதி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோரின்

திமுக எம்.பிக்கள், அமைச்சர்கள் குறித்து அவரது சொத்துக்கள் என அண்ணாமலை வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், கனிமொழி, கலாநிதி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோரின் சொத்துக்கள் என குறிப்பிட்ட தொகை விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

திமுக சொத்துப்பட்டியலை இன்று வெளியிட போவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னதாக அறிவித்து இருந்தார். அதற்கேற்றாற் போல, திமுக சொத்து விவரங்கள் (DMK Files ) எனபுதிய விடியோவுக்குகான முன்னோட்டத்தை நேற்று வெளியிட்டு, இன்று முதல் வீடியோவை சென்னை பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டார்.

திமுக எம்.பி, எம்.எல்.ஏக்கள் சொத்து பட்டியல் :

unknown node

அதில், திமுக அமைச்சர்கள், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய விவரங்களை குறிப்பிட்டு, அவர்களின் சொத்து மதிப்பு என அந்த வீடியோவில் ஒரு குறிப்பிட்ட தொகையை பதிவிட்டு வெளியிடப்பட்டுள்ளது. அந்த சொத்து மதிப்பு பட்டியலில், திமுக எம்பிக்கள் கனிமொழி, கலாநிதி மாறன், டி.ஆர்.பாலு, கதிர் ஆனந்த் உட்பட பல திமுக அமைச்சர்களின் பெயர்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுக எம்.பிக்கள் :

unknown node

இதில், திமுக எம்.பி கனிமொழி குடும்பத்தாரிடம் 830 கோடி சொத்துக்கள் இருப்பதுவும், , திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் குடும்பத்தாரிடம் மொத்தமாக 50, 210 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாகவும், திமுக எம்பி கலாநிதி மாறன் குடும்பத்தாரிடம் 12,450 கோடி,சொத்துக்கள் இருப்பதுவும், எம்பி டி .ஆர்.பாலு குடும்பத்தாரிடம் 10,841 கோடி சொத்துக்கள் இருப்பதாகவும், திமுக எம்பி கதிர் ஆனந்த் குடும்பத்தாரிடம் 579 கோடி சொத்துக்கள் இருப்பதாகவும், அண்ணாமலை வெளியிட்ட வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுக அமைச்சர்கள் :

unknown node

திமுக அமைச்சர் எ.வ.வேலு குடும்பத்தாரிடம் 5,442 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாகவும், திமுக அமைச்சர் கே.என்.நேரு குடும்பத்தாரிடம் 2,495 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாகவும், அமைச்சர் பொன்முடி குடும்பத்தாரிடம் 581 கோடி சொத்துக்கள் இருப்பதுவும் அந்த வீடியோவில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.