திருவாரூரில் நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் மதுபாட்டில் வீசப்பட்டது. இதனை அடுத்து மாற்று கட்சியினரை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டையில் நாம் தமிழர் கட்சி சார்பில்,அக்கட்சி கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சி பிரமுகர் காளியம்மாள் கலந்துகொண்டு பேசினார்.
மதுபாட்டில் வீச்சு :அவர் பேசுகையில், திமுக அரசை விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த சிலர் மது பாட்டில்களை மேடை மீது இருந்துள்ளனர். இதில் நாம் தமிழர் கட்சியினர், உடனடியாக மேடையை சூழ்ந்துகொண்டு பேச்சாளர் மேல் தாக்குதல் நடைபெறாமல் தடுத்துள்ளனர்.
காவல்துறை நடவடிக்கை :இதற்கிடையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் மதுபாட்டில் வீசிய மாற்று கட்சியினரை தடுத்து நிறுத்தி அவர்களை அவர்கள் கட்சி அலுவலகத்திற்குள் அடைத்து தள்ளினார்.
கைது :இதனை அடுத்து மதுபாட்டில் வீசிய மாற்று கட்சியினரை கைது செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனை தொடர்ந்து, மாற்று கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.