ஆன்மீகத்தின் அடையாளமாகவே அதிமுக ஆட்சி உள்ளது – ராஜேந்திரபாலாஜி

We are conducting politics in a spiritual way. Spirituality does not depend on one religion. Depends on the Lord. Religions may be different.

நாங்கள் ஆன்மீக வழியில் அரசியல் நடத்தி வருகிறோம். ஆன்மீகம் என்பது ஒரு மதம் சார்ந்தது கிடையாது. இறைவன் சார்ந்தது. மதங்கள் வெவ்வேறாக இருக்கலாம்.

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், நாங்கள் ஆன்மீக வழியில் அரசியல் நடத்தி வருகிறோம். ஆன்மீகம் என்பது ஒரு மதம் சார்ந்தது கிடையாது. இறைவன் சார்ந்தது. மதங்கள் வெவ்வேறாக இருக்கலாம். சிலைகள் வெவ்வேறாக இருக்கலாம்.  எங்களுக்கு எம்மதமும் சம்மதம். இந்தக் கட்சி, ஆன்மீக கட்சி. தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆட்சி எம்ஜிஆர்-ஜெயலலிதா ஆட்சிதான் என கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், அதிமுக ஆன்மிகத்தின் அடையாளமாகவே ஆட்சி நடத்தி வருகிறது என்றும்,  திமுக கூட்டணியில் ஒற்றுமை கிடையாது. ஒரு பேப்பர் இல்லாமல் ஸ்டாலினை ஒரு திருக்குறள் சொல்ல சொல்லுங்கள். பின்னர் அவர் சொல்வதை எல்லாம் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்றும் மு.க.ஸ்டாலினை விமர்சித்துள்ளார்.