#Breaking:முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் வங்கி கணக்கு முடக்கம் – போலீசார் நடவடிக்கை..!

AIADMK ex-minister SP Velumani's bank account frozen

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

டெண்டர் முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் வங்கி கணக்கு,லாக்கர்கள்  முடக்கப்பட்டுள்ளது.அதிமுக ஆட்சியில் முறைகேடாக டெண்டர்களை ஒதுக்கியதாக அவர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

இதனால்,முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய 60 இடங்களில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய நிலையில்,அவரது வங்கி கணக்கை தற்போது முடக்கியுள்ளனர்.

இதனையடுத்து,அவரது சொத்து ஆவணங்கள் தொடர்பாக தகவல் சேகரிக்கும் முயற்சியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

#Breaking:முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் வங்கி கணக்கு முடக்கம் – போலீசார் நடவடிக்கை..!