அதிமுக துணை நிர்வாகிகள் நியமனம் – ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அறிவிப்பு..!

AIADMK appoints deputy executives - OPS and EPS announcement.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் தலைமையில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்றது.

இந்த கூட்டத்தில்,காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசை வலியுறுத்தல்,குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 தருவதாக அறிவித்ததை உடனடியாக திமுக அரசு நிறைவேற்ற  வேண்டும் உள்ளிட்ட 6 முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில்,அதிமுக துணை நிர்வாகிகளை நியமனம் செய்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் இணைந்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

மேலும் இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மற்றும் சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.அதன்படி,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் :

கொள்கை பரப்பு துணைச் செயலாளர் – பேராசிரியர் முனைவர் சா. கலைப்புளிதன், M.Com., M.Sc., M.A, M.L., M.Phil, Ph.D., (தலைமைக் கழகப் பேச்சாளர், வட சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டம்)

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள்- இணைச் செயலாளர்கள் :

திரு. R.P. மருதராஜா, M.Sc., Ex. M.P., அவர்கள் (பெரம்பலூர் மாவட்டம்)

டாக்டர் S. முத்தையா, Ex. M.L.A., அவர்கள் (பரமக்குடி சட்டமன்றத் தொகுதி, ராமநாதபுரம் மாவட்டம்)

திரு. ராயபுரம் மனோ அவர்கள் (சென்னை மாநகராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர்,வட சென்னை மாவட்டம்)

திரு. M.C. தாமோதரன், Ex. M.P., அவர்கள்(முன்னாள் அமைச்சர், கடலூர் மாவட்டம்)

கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை நிர்வாகிகள்

இணைச் செயலாளர் – பொன். ராஜா, Ex. M.L.A., அவர்கள் (பொள்ளேரி தொகுதி, திருவள்ளூர் வடக்கு மாவட்டம்)

துணைச் செயலாளர் – P. சந்தானகிருஷ்ணன் அவர்கள் (சென்னை மாநகராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர்,வட சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டம்)

கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி:

இணைச் செயலாளர் -திரு.E. லட்சுமிநாராயணன் அவர்கள் (சென்னை மாநகராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர்,வட சென்னை வடக்கு மாவட்டம்)

கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு :

திரு. M.A. சேவியர் அவர்கள் (திருவள்ளுவர் நகர், கொடுங்கையூர்,பெரம்பூர் பகுதி, வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே,கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறோம்”, என்று தெரிவித்துள்ளனர்.

unknown node