மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளார்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.மாநிலங்களவை தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களை இறுதி செய்ய கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது.
unknown nodeஇதன் பின்னர் இறுதியாக மாநிலங்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளராக முகமது ஜான் மற்றும் சந்திரசேகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.முகமது ஜான் அதிமுகவின் வேலூர் கிழக்கு மாவட்ட சிறுபான்மையினர் இணை செயலாளராக உள்ளார்.மேலும் சந்திர சேகர் அதிமுக மேட்டூர் நகர கழக செயலாளராக உள்ளார்.மேலும் அதிமுகவின் இன்னொரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதிமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.