பொதுத்தேர்வு முடிந்த பிறகு மாலை 3 மணிக்கு தேர்வுக்கு வராத மாணவர்கள் குறித்து தேர்வு மையத்தில் இருந்து ஒருவர் சென்று விசாரிக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழக்தில் இந்த வாரம் துவங்கிய 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கல்வி அதிகாரிகளுடன் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார்.
ஆலோசனை கூட்டம் :
கல்வியாளர்கள் உடன் நடந்த ஆலோசனை முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், எதனால் இவ்வளவு பேர் தேர்வு எழுத வரவில்லை. இதே போல கடந்த ஆண்டு நடைபெற்றபோது எடுத்த நடவடிக்கை என்னென்ன என்பது பற்றி தெரிந்துகொண்டேன் என தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து தேர்வு முடிந்த பின்பு பேச வேண்டாம் என்று இப்போதே ஆலோசிக்க ஆரம்பித்தோம். என்று குறிப்பிட்டார்.
கள ஆய்வு :
அடுத்ததாக , ஒவ்வொரு தேர்வு முடிந்த பிறகும், 3 மணிக்கு மேல், தேர்வு மையத்தில் இருந்து ஒருவர் வெளியில் செல்ல வேண்டும். தேர்வுக்கு வராத மாணவர்கள் ஏன் வரவில்லை என காரணம் ஆராய வேண்டும் என நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது எனவும், மாணவர்கள் தேர்வுக்கு வராததற்கான காரணம் அப்போது தான் தெரிய வரும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மாவட்ட வாரியாக காரணங்கள் :
அப்படி வரும் ஆசிரியர்கள்/ கல்வி அதிகாரிகளிடம் பெற்றோர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். அவர்களுக்கு உரிய மரியாதை கொடுங்கள் எனவும், கல்விக்கு முக்கியத்துவம் கொடுங்கள் எனவும், இது முடிந்த பிறகு மாவட்ட வாரியாக மொத்தமாக மாவட்ட ஆட்சியர், பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் ஏன் எழுதவில்லை என கரணம் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
பெற்றோர்கள் கவனத்திற்கு :
மார்ச் 24அன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது எனவும், அன்று மாணவர்கள் தேர்வுக்கு ஏன் வரவில்லை என காரணம் தெரிவிக்க வேண்டும் எனவும் தேர்வெழுதாத மாணவர்கள் அனைவரையும் மறுதேர்வு எழுத வைக்க வேண்டும் என்பதே இலக்கு. என்றும், இதற்கு பெற்றோர்கள் துணை நிற்க வேண்டும் எனவும், கேட்டுக்கொண்டார்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு :
அடுத்து, ஏப்ரல் 6ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஏப்ரல் 10இல், மீண்டும் கல்வியாளர்கள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெறும் எனவும், அப்போது 10ஆம் வகுப்பில் இது போல வருகை இல்லாமல் இருத்திவிட கூடாது என்பதற்காக தற்போதே முயற்சி மேற்கொண்டு வருகிறோம். எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.