அண்மையில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு டெல்லியில் இன்று மேயர் தேர்தல் நடைபெற உள்ளது .
அன்மையில் நடைபெற்ற டெல்லி உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 250 மாநகராட்சி இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களை வென்றது. ஏற்கனவே உள்ளாட்சியில் அதிகம் செலுத்தி வந்த பாஜக 104 இடங்களை கைப்பற்றியது . காங்கிரஸ் கட்சி 9 இடங்களை கைப்பற்றியது.
இந்நிலையில் டெல்லி மாநகரின் புதிய மேயர் யார் என இன்று கூட்டப்படும் டெல்லி மாமன்ற கூட்டத்தில் தேர்தல் மூலம் முடிவு செய்யப்படும். இதில் டெல்லி மேயர் வேட்பாளருக்கு ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஷெல்லி ஓபராய் மற்றும் அஷ்ஷூ தாக்கூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதே போல பாஜக சார்பில் ரேகா குப்தா நிற்கிறார்.
அதேபோல துணை மேயர் பதவிக்கு ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் ஜலஜ் குமார் மற்றும் ஆலே முகமது இக்பால் ஆகியோரும் பாஜக சார்பில் கமல் பக்ரியும் களமிறங்குகின்றனர்.
இன்று புதிய கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்றபிறகு மேயருக்கான தேர்தல் நடைபெறும். புதிய மேயராக, துணை மேயராக தேர்ந்தெடுக்கப்படுவோரை டெல்லி லெப்டினண்ட் கவர்னர் வினய் குமார் சக்ஷேனா பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். காங்கிரஸ் கட்சி இந்த மேயர் தேர்தலை புறக்கணிக்கிறது.