சட்டமன்றத் தேர்தல் செலவுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு: அரசாணை..!

Additional allocation for Assembly election expenses: Government

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு ரூ. 744 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலானது கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்று, அதன்பின்னர்,தேர்தல் முடிவுகள்  மே 2 ஆம் தேதி வெளியாகின.

எனினும்,தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே,தேர்தல் செலவிற்காக  617.75 கோடி ரூபாய் முதலில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.பிறகு தேர்தல் முடிந்ததும் அதற்கான வரவு,செலவு கணக்கு பார்க்கப்பட்டது.அதில் 126.18 கோடி ரூபாய் கூடுதலாக செலவு செய்யப்பட்டு இருந்தது.எனவே,அதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய அரசிடம் தலைமை தேர்தல் அதிகாரியான சத்திய பிரதா சாகு கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில்,தேர்தலுக்கு ரூ. 744 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.அதில் தொலைபேசி, எரிபொருள், வாகனத்திற்கான வாடகை, விளம்பரம் உள்ளிட்டவற்றுக்காக 126.18 கோடி ரூபாய் கூடுதலாக செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக 48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தல் செலவுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு: அரசாணை..!