நடிகர் விவேக் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது- திருமாவளவன்..!

— Thol. Thirumavalavan (@thirumaofficial) April 17, 2021

நடிகர் விவேக் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன்  தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவிற்கு பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டரில் நடிகர் விவேக் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவருடைய மறைவு பல கேள்விகளுக்கு இடமளிப்பதாக அமைந்துவிட்டது. தடுப்பூசி போட்டதற்குப் பின்னர்தான் அவர் சுயநினைவை இழந்தார் என்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அரசு தெளிவுபடுத்த வேண்டும். அவருக்கு எமது அஞ்சலி என பதிவிட்டுள்ளார்.

unknown node