இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் போதைக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் 1 கோடி கையெழுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் கையெழுத்திட்டார்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் போதை பழக்கத்திற்கு இளைஞர்கள் அடிமையாவதை தடுப்பதற்காக அதற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தொடங்கபட்டது. இந்த ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தினை கடந்த 12ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா தொடங்கி வைத்தார்.
unknown nodeஒரு கோடி கையெழுத்து :இந்த ஒரு கோடி கையெழுத்து இயக்கமானது தமிழக முழுவதிலும் பல்வேறு மாவட்டத்தில் தொடங்கப்பட்டு அந்தந்த மாவட்ட வாலிபர் சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள், அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என பலரிடம் கையெழுத்துக்களை பெற்று வருகின்றனர். வரும் 27ஆம் தேதியோடு இந்த கையெழுத்து இயக்கமானது முடிவடைய உள்ளது.
unknown nodeகமல்ஹாசன் :கடந்த வாரம், நடிகரும் மக்கள் நீதி மைய கட்சித் தலைவருமான கமல்ஹாசன் கையெழுத்து போட்டிருந்தார். மேலும், விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குனர் வினோத் உள்ளிட்ட பலரும் கையெழுத்து போட்டு தங்கள் ஆதரவுகளை அளித்துள்ளனர்.
unknown nodeரஜினிகாந்த் :இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் இந்த ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில் தனது கையெழுத்தை இட்டு அவர்களை வாழ்த்தினார். மேலும், உங்களின் மிகச்சிறந்த பணிக்கு எனது வாழ்த்துக்கள் எனவும் கூறியுள்ளார்.