பீகாரில் கடந்த டிசம்பர் மாதம் நிகழ்ந்த கலாச்சாரய உயிரிப்புகள் 42 அல்ல 77 என தேசிய மனித உரிமைகள் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
பீஹார் சரண் மாவட்டத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் கள்ளச்சரம் குடித்து பலர் உயிரிழந்தனர். இதில் மாநில அரசு 42 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவித்து இருந்தது. இந்த கருத்தை தற்போது மனித உரிமை ஆணையம் மறுத்துள்ளது.
77 உயிரிழப்புகள் :
இதனை பாஜகவை சேர்ந்த பீகார் சட்ட மேலவை உறுப்பினர் சஞ்சய் மயூக் பீகார் சட்ட மேலவையில் கேள்வியாக எழுப்பினார். அதில், தேசிய மனித உரிமை ஆணையம் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 77 என குறிப்பிட்டுள்ளது எப்படி என்று கேள்வி எழுப்பினர். மாநில அரசு இறப்பு எண்ணிக்கையை மறைத்து விட்டது எனவும் குற்றம் சாட்டினார்.
மதுவிலக்கு :
கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து ஆய்வு செய்ய 13 பேர் கொண்ட தேசிய மனித உரிமை ஆணைய குழு தெரிவிக்கையில், ‘2016 ஆம் ஆண்டில் மாநிலத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட்டது. அப்போது முதல் கள்ள மதுபானங்களை அருந்தி அதனால் ஏற்படும் இறப்புகள் பீகாரின் அதிகரித்துவிட்டன.’ என்பதையும் சுட்டிக்காட்டினர்.