#Breaking:மின்வாரியத்துக்கு ரூ.424 கோடி வருவாய் இழப்பு – சிஏஜி ..!

According to the CAG report, the Tamil Nadu Electricity Board has lost Rs 424 crore in revenue due to the purchase of electricity at high prices

அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்துக்கு ரூ.424 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் தவறான நிர்வாகத்தால் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், நிதி நிலை மற்றும் நிர்வாக கட்டமைப்பு குறித்து கடந்த 21 ஆம் தேதியன்று நடைபெற்ற சட்டப்பேரவையின் ஆளுநர் உரையில் சொல்லப்பட்டது.

இதற்கிடையில்,இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கூறுகையில்: “கடந்த ஆட்சியில் தனியார் துறையிடமிருந்து மின்சாரம் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.மேலும், அதற்கான நீண்ட கால ஒப்பந்தத்தில் அதிக குளறுபடிகள் இருப்பதால்தான் இழப்பு ஏற்பட்டுள்ளது”,என்று கூறினார்.

இந்நிலையில்,அதற்கான உரிய ஆதாரமாக இந்திய கணக்காய்வு தணிக்கை அறிக்கை இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில்,ஜி.எம்.ஆர்.மின் கார்ப்பரேசன் நிறுவனத்திடம் இருந்து சந்தை விலையில் ரூ.3.39 முதல் ரூ.5.42-க்கு பெற வேண்டிய மின்சாரத்தை 12 ரூபாய்க்கு கடந்த ஆட்சி காலத்தில் தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளது.

அவ்வாறு,அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் தமிழ்நாடு மின்வாரியத்துக்கு ரூ.424 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய கணக்காய்வு தணிக்கை (சிஏஜி)அறிக்கை தெரிவித்துள்ளது.