பிரதமர் மோடியின் கல்லூரி சான்றிதழ்.! பாஜக பயப்படுகிறது.! ஆம் ஆத்மி எம்.பி விமர்சனம்.!

பிரதமர் மோடியின் கல்லூரி சான்றிதழ் பற்றி பேசியவுடன் பாஜக அதிர்கிறது என  ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய்சிங் விமர்சனம் செய்துள்ளார்.

பிரதமர் மோடியின் கல்லூரி சான்றிதழ் பற்றி பேசியவுடன் பாஜக அதிர்கிறது என  ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய்சிங் விமர்சனம் செய்துள்ளார்.

பிரதமர் மோடி, முதுகலை பட்டபடிப்பு படித்து முடித்துள்ளதாக பாஜக தரப்பில் கூறப்படுகிறது. இதற்கான சான்றிதழையும் மத்திய அமைச்சர் அமித்ஷா வெளிப்படுத்தினார். இந்த சான்றிதழ் மீதான விமர்சனம் தொடர்ந்து எழுந்து வந்ததது.

இது குறித்து ஆம் ஆத்மி கட்சி எம்பியும், அக்கட்சியின் செய்தி தொடர்பாளருமான சஞ்சய் சிங் கூறுகையில், பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் பற்றி பேச ஆரம்பித்தது உடன் பாஜகவினர் பதட்டமடைகிறார்கள். அந்த பட்டப்படிப்பில் உள்ள எழுத்துக்கள் தவறாக உள்ளது என்றும்,

2005ஆம் ஆண்டே பிரதமர் மோடி ஒரு மேடையில் பேசும்போது, நான் பள்ளிப்படிப்பை தாண்டாதவன் என பேசியதை சஞ்சய் சிங் சுட்டிக்காட்டினார். சான்றிதழ் போலி இல்லை என கூற பாஜகவினர் கடுமையாக முயற்சிக்கிறார்கள் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.