பிரதமர் மோடியின் கேரளா பயணம்.! தற்கொலைபடை தாக்குதல் மிரட்டல்.?

பிரதமர் மோடியின் கேரள பயணம் குறித்து, ஒரு தற்கொலை படை மிரட்டல் கடிதம் பாஜக அலுவலகத்திற்கு கிடைத்துள்ளது.

பிரதமர் மோடியின் கேரள பயணம் குறித்து, ஒரு தற்கொலை படை மிரட்டல் கடிதம் பாஜக அலுவலகத்திற்கு கிடைத்துள்ளது.

பிரதமர் மோடி திங்கள் கிழமை அன்று 2 நாள் பயணமாக கேரளா செல்ல உள்ளார். அங்கு  கேரளாவில் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கொச்சியில் 24ஆம் தேதி துவங்கி வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. பாதுக்காப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ராஜீவ் காந்தி :

unknown node

[Image Source : Google]

இந்த சமயத்தில், கேரள மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரனின் அலுவலகத்திற்கு கொச்சியில் இருந்து மலையாளத்தில் எழுதி மிரட்டல் கடிதம் ஒன்று வந்துளளது. அதில்,  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கதியை பிரதமர் மோடி சந்திக்க நேரிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னை வந்த போது தான் தற்கொலைப்படை தாக்குதலால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த கடிததமானது,என்.கே.ஜானி என்பவர் எழுதியதாக குறிப்பிடப்பட்டு இருந்துள்ளது.

மிரட்டல் கடிதம் :

unknown node

[Image Source : Google]

உடனே, போலீசார் விசாரணையை துவங்கி, கொச்சியை சேர்ந்த ஜானி என்பவரை விசாரித்துள்ளனர். அதில், ஜானி தான் கடிதம் எழுதவில்லை என்று மறுத்தார், அதன் பின்னர் அவரது கையெழுத்து சரிபார்க்கப்பட்டது. அதில் அவர் கையெழுத்து , கடிதத்தில் உள்ள கையெழுத்தோடு பொருந்தவில்லை என தெரிகிறது. தன் மீது வெறுப்பு கொண்ட யாரேனும் ஒருவர் மிரட்டல் கடிதம் எழுதி இருக்கலாம் என ஜான் காவல்துறையினரிடம் கூறி,  தான் சந்தேகப்படும் நபர்களின் பெயர்களையும் ஜான் பகிர்ந்துள்ளார். அதனை கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், பாஜக கேரள மாநில தலைவர் கே.சுரேந்திரன் கூறுகையில், பிரதமரின் வருகை தொடர்பான விவிஐபி பாதுகாப்பு திட்டத்தை கசியவிட்டதாக கூறி  மாநில காவல்துறையை கடுமையாக விமரிசித்துள்ளார்.