மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம்... துணை முதல்வராகிறாரா எதிர்கட்சித்தலைவர்?

மகாராஷ்டிரா மாநில எதிர்கட்சித்தலைவர் அஜித் பவார், ஆளும் பாஜக-சிவசேனா கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல்.

Ajit pawar

மகாராஷ்டிரா மாநில எதிர்கட்சித்தலைவர் அஜித் பவார், ஆளும் பாஜக-சிவசேனா கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல்.

மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக, எதிர்க்கட்சித்தலைவரும் சரத் பவாரின் மருமகனுமான அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின்(என்சிபி) சில எம்.எல்.ஏ க்களுடன், சேர்ந்து அம்மாநிலத்தில் ஆளும் சிவசேனா-பாஜக கூட்டணியில் இணைவதற்கு ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும் ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

unknown node

ஆளுநர் ரமேஷ் பாய்ஸ் உடனான சந்திப்பில் அஜித் பவாருடன் என்சிபி மூத்த தலைவர்களான சாகன் புஜ்பால் மற்றும் பிரபுல் படேல் ஆகியோர் இணைந்துள்ளனர். அஜித் பவருக்கு அம்மாநில துணை முதல்வர் பதவி வழங்கப்படும் எனவும், துணை முதல்வர் பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸுடன் இணைந்து அஜித் பவார் கவனித்துக்கொள்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் ஆளுநர் மாளிகையில் இன்று பதவியேற்பு விழா நடைபெறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும், வரவிருக்கும் அமைச்சரவை விரிவாக்கத்தில் அஜித் பவார் மற்றும் பிற என்சிபி தலைவர்களுக்கு சில துறைகள் ஒதுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.