பாஜக கூட்டத்தில், எடப்பாடி பழனிச்சாமி எல்லாம் திறனற்றவர், ஆளுமையில்லாதவர் என பாஜக பிரமுகர் பேச ஆரம்பிக்கையில் உடனே சட்டென சுதாரித்த கரு நாகராஜ் மைக்கை அவரிடம் இருந்து பிடுங்கி விட்டார்.
வடமாநில தொழிலாளர்கள் பற்றி அவதூறு விளைவிக்கும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாக கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பாஜக ஆர்ப்பாட்டம் :
unknown nodeசென்னை வள்ளுவர் கூட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கரு நாகராஜ் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் , தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ ஆகியோர் கலந்து கொண்டனர்.
இபிஎஸ் மீது விமர்சனம் :
unknown nodeஅப்போது பாஜக நிர்வாகி விஜய் ஆனந்த் மேடையில் பேசுகையில், தமிழகத்தில் நாம் தான் எதிர்க்கட்சி என நிரூபித்து வருகிறோம். எடப்பாடி பழனிச்சாமி எல்லாம் திறனற்றவர், ஆளுமையில்லாதவர் என கூற ஆரம்பிக்கையில் உடனே சட்டென சுதாரித்த கரு நாகராஜ் மைக்கை அவரிடம் இருந்து பிடுங்கி விட்டார். இதனால் கூட்டத்தில் சிறுது சலசலப்பு ஏற்பட்டது.
அதிமுக – பாஜக :
unknown nodeஏற்கனவே, பாஜக தலைவர் அண்ணாமலை தன்னை ஜெயலலிதாவுடன் ஒப்பிடுவது , அதனை எதிர்த்து அதிமுகவினர் கருத்து சொல்வது, பாஜகவில் இருந்து பலர் விலகி அதிமுகவில் இணைவது என கூட்டணி கட்சிக்குள்ளேயே சில முரண்பாடுகள் நிகழ்ந்து, தற்போது தான் சுமூக நிலை எட்டப்பட்டு வரும் நிலையில், இந்த நிகழ்வு அதிமுக – பாஜக கூட்டணியில் மீண்டும் ஒரு சலசலப்பை உண்டாக்கியுள்ளது.