ஆளுநரின் செயல்பாடுகள், ஆளுநரின் மீதான மூன்று பயன்பாடுகளை நிறுத்தி வைத்து சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆளுநர் செயல்பாடுகளுக்கு எதிராக, தமிழக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வரப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஆளுநர் செயல்பாடுகள் குறித்த தீர்மானமனத்தை அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்தார்.
கதவுகள் மூடல் :
இந்த தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு தொடங்கும் முன்னரே அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினர். அதன் பிறகு தனித்தீர்மானம் மீது வாக்கெடுப்பை சபாநாயகர் அப்பாவு நடத்தினர். அப்போது விதிகளின் படி சட்டப்பேரவை கதவுகள் மூடப்பட்டது.
எண்ணிக்கணிக்கும் முறை :
2017க்கு பிறகு தமிழக சட்டப்பேரவையில் எண்ணி கணிக்கும் முறைப்படி தீர்மானம் வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்படுகிறது. எண்ணி கணிக்கும் வாக்கு முறைய சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
ஆளுநர் செயல்பாடுகள் :
முதலில், ஆளுநர் செயல்பாடுகளில் சில பதங்களை (விதிகளை) நிறுத்தி வைக்க தீர்மானம் கொண்டுவப்பட்டுள்ளது. அதில் ஒன்று சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர கூடாது என்ற விதியை நிறுத்தி வைப்பதும் ஒன்றாகும்.
தீர்மானம் நிறைவேற்றம் :
இந்த தீர்மானத்தை ஆதரிப்போர் எழுந்து நிற்கும்படி கேட்டுக்கொண்டார் . அதில் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தார். இதனை அடுத்து, அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.