துரோகத்தின் அடையாளம் எடப்பாடியார்.! சர்ச்சை வீடியோ பதிவிட்ட சசிகலா ஆதரவாளர்.!

துரோகத்தின் அடையாளம் எடப்பாடியார் என மதுரை விமான நிலையத்தில் சசிகலா ஆதரவாளர் ஒருவர் சமூகவலைதளத்தில் நேரலையில் வீடியோ பதிவிட்டுள்ளார்.

துரோகத்தின் அடையாளம் எடப்பாடியார் என மதுரை விமான நிலையத்தில் சசிகலா ஆதரவாளர் ஒருவர் சமூகவலைதளத்தில் நேரலையில் வீடியோ பதிவிட்டுள்ளார்.

இன்று கட்சி நிகழ்வுகளில் பங்கேற்க அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மதுரை வந்திருந்தார். அப்போது சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார்.

வலைதளத்தில் நேரலை :

மதுரை விமான நிலையத்தில் பேருந்தில் பயணித்த போது, உடன் பயணித்த சக பயணி ஒருவர் தனது மொபைல் மூலம் ஒரு வீடியோ எடுத்தும் தன்னை தனது சமுக வலைதளத்தில் நேரலையாக பதிவிட்டார்.

துரோகத்தின் அடையாளம் எடப்பாடி :

அப்போது அந்த வாலிபர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி என்றும், துரோகத்தின் அடையாளம் எடப்பாடி பழனிசாமி என்றும், சின்னமாவுக்கு துரோகம் செய்தவர் என்றும் அந்த சசிகலா ஆதரவாளர் நேரலையில் பேசினார். அப்போது உடனிருந்த பாதுகாவலர் அந்த வீடியோவை தடுத்துவிட்டார்.

போலீசார் விசாரணை :

இது நேரலையாக பகிரப்பட்டதால் தற்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. தற்போது அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

unknown node